“தாக்­குதல் நடை­பெற்ற சில மாதங்­க­ளி­லேயே மதச் சுதந்­திரம் குறித்து தீர்­மா­னிக்க முற்­பட்­டது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது”

Published By: J.G.Stephan

05 Mar, 2020 | 03:01 PM
image

மதச் சுதந்­திரம் குறித்த ஐக்­கிய நாடு­களின் சிறப்பு அறிக்­கை­யா­ளரின்  இலங்கை விஜயம் குறித்த அறிக்­கை­யா­னது, உயிர்த்­த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து சில மாதங்­க­ளி­லேயே இலங்­கையில் மதச் சுதந்­திரம் அல்­லது நம்­பிக்­கைக்­கான இடத்தை தீர்­மா­னிக்க முற்­பட்­டது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது என்று ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் இலங்கை பிர­தி­நிதி தெரி­வித்தார்.

மதம் அல்­லது நம்­பிக்கை சுதந்­தி­ரத்­துக்­கான சிறப்பு அறிக்­கை­யா­ளரின் இலங்கை விஜயம் சம்­பந்­த­மாக மனித உரி­மைகள் பேர­வையின் 43 ஆவது அமர்வில்   வழங்­கப்­பட்ட அறிக்கை   தொடர்­பி­லேயே  இலங்கை பிர­தி­நிதி இதனை குறிப்­பிட்டார். அவர்  மேலும் உரை­யாற்­று­கையில்,

மதச் சுதந்­திரம் அல்­லது நம்­பிக்­கையின் சிறப்பு அறிக்­கை­யாளர்   அஹ்மத் ஷாஹீத் 2019 ஆகஸ்ட் 15 முதல் 26 ஆகஸ்ட் வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு விஜயம் செய்­ததைத் தொடர்ந்து வெளி­யிட்ட அறிக்­கையைக் கவ­னத்தில் கொண்ட இலங்கை,  இச்­ச­பையில் இவ்­வ­றிக்­கையை வழங்­கு­கி­றது.   சிறப்பு அறிக்­கை­யா­ளரின் மேம்­பட்ட திருத்­தப்­ப­டாத அறிக்­கை­யா­னது, இலங்­கையின் கருத்­து­க­ளுக்­காக, பெப்­ர­வரி 28, 2020 காலக்­கெ­டு­வுடன் பெப்­ர­வரி 3, 2020 அன்று,  இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டது.  

இருப்­பினும், மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட இந்த காலப்­ப­கு­தியில் சிறப்பு அறிக்­கை­யா­ளரின் அறிக்­கைக்கு இலங்கை சில பொது­வான அவ­தா­னிப்­பு­களை வழங்­க ­வி­ரும்­பு­கி­றது. வர­வி­ருக்கும் எமது முழு­மை­யான அவ­தா­னிப்­பு­களும் இந்த அறிக்­கையின் ஒரு அங்­க­மாக பிர­சு­ரிக்­கப்­ப­ட­வேண்­டு­மென நாம் கோரிக்கை விடுக்­கின்றோம். சிறப்பு அறிக்­கை­யா­ளரின் விஜ­ய­மா­னது ஐ.எஸ் பயங்­க­ர­வா­தி­களால் ஈர்க்­கப்­பட்ட சில உள்­நாட்டுப் பயங்­க­ர­வாத குழுக்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டதும் வழி­பாட்­டி­டங்கள் மற்றும் ஹோட்­டல்­களில் அப்­பாவி மக்­களைக் குறி­வைத்து, 45 வெளி­நாட்டு சுற்­று­லாப் ­ப­ய­ணிகள் உள்­ளிட்ட 258 பேரைப் பலி­கொண்­ட­து­மான கொடு­மை­யான தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடந்­தே­றிய நான்கே மாதங்­களில்  இடம்­பெற்­றது. தேசம் எதிர்­கொண்ட பல்­வேறு சவால்­களின்போது, இந்த விஜயம் ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­மை­யா­னது, ஐ.நா. மனித உரிமை பொறி­மு­றை­க­ளுடன் திறந்­ததும் ஆக்­க­பூர்­வ­மா­ன­து­மான உரை­யா­டல்­களைப் பேணுவ­தென்ற அர­சாங்­கத்தின் கொள்­கையின் வெளிப்­பா­டாகும்.

இன, மத வேறு­பா­டுகள் இருந்­த­போதிலும் இலங்கை மக்கள் பல நூற்­றாண்­டு­க­ளாக இணக்­க­மாக வாழ்ந்து வரு­கின்­றனர், தொடர்ந்தும் வாழ்­கின்­றனர். ஏறக்­கு­றைய மூன்று தசாப்­தங்­க­ளாக பிரி­வி­னை­வாத பயங்­க­ர­வா­தத்தின் வேத­னையை அனு­ப­வித்த அவர்கள், கடும் போராட்­டத்தின் மூலம் வென்ற அமை­தி­யையும் சுதந்­தி­ரத்­தையும் அனு­ப­வித்து வந்­த­துடன், கடந்த தசாப்­தத்தில் நல்­லி­ணக்கப் பாதை­யிலும் தேசிய ஆற்­றுப்­ப­டுத்தல் முயற்­சி­க­ளிலும் இறங்­கினர். ஆன­போ­திலும், உயிர்த்­தெ­ழுந்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் உல­க­ளா­விய அச்­சு­றுத்­த­லான பயங்­க­ர­வாதம் அடிப்­ப­டை­வாதம் மற்றும் தீவி­ர­வா­தத்தின் ஒரு பொது எதி­ரியை நாம் எதிர்த்துப் போரா­டு­கிறோம் என்­பதை நினை­வூட்­டி­யது.

இச்­சூழ்­நி­லையில், சிறப்பு அறிக்­கை­யா­ளரின் அறிக்­கை­யா­னது, உயிர்த்­தெ­ழுந்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து சில மாதங்­க­ளி­லேயே இலங்­கையில் மதச் சுதந்­திரம் அல்­லது நம்­பிக்­கைக்­கான இடத்தை தீர்­மா­னிக்க முற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த தாக்குதல்களின் அளவு இலங்கையில் ஒரு தேசிய அவசரகால நிலையை ஏற்படுத்தி, அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் நலனுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பயங்கரவாத கூறுகளை அடையாளம் கண்டு மட்டுப்படுத்துவதற்கு  அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16