பிம்ஸ்டெக் அமைப்பில் விஞ்­ஞானம், தொழில்­நுட்பம் கண்­டு­பி­டிப்புத்துறையை இலங்கை வழி­ந­டத்­த­வுள்­ளது

Published By: Daya

05 Mar, 2020 | 01:47 PM
image

பல்­துறை தொழில்­நுட்ப மற்றும் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­புக்­கான வங்­காள விரி­குடா முன்­மு­யற்­சியில் (பிம்ஸ்டெக்) விஞ்­ஞானம், தொழில்­நுட்பம் மற்றும் கண்­டு­பி­டிப்புத்துறையை இலங்கை வழி­ந­டத்­த­வுள்­ளது.

எதிர்­கா­லத்தில் பிம்ஸ்­டெக்கின் தொழில்­நுட்ப பரி­மாற்ற வச­தியை இலங்­கையில் திறப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. மேலும், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிம்ஸ்டெக் செய­ல­கத்­திற்­கான ஒரு பணிப்­பா­ள­ரையும் இலங்கை நிய­மிக்­க­வுள்­ளது  என்று வெளி­வி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் வெளிவி­வ­கார அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

2020 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி வெளி­வி­வ­கார செய­லாளர் ரவி­நாத ஆரி­ய­சிங்கவின் தலை­மையில் நடை­பெற்ற சிரேஷ்ட அதி­கா­ரிகள் கூட்­டத்தின் 20ஆவது அமர்வில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடு­க­ளி­டையே ஒத்­து­ழைப்­புக்­கான பகு­திகள் இறுதி செய்­யப்­பட்­ட­போது இந்த விடயம்   ஒப்புக்கொள்­ளப்­பட்­டது. சிரேஷ்ட அதி­கா­ரிகள் கூட்­டத்­துக்கு முன்­ன­தாக, பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான லேதிக செய­லாளர் பி.எம். அம்ஸாவின்  தலை­மையில் 2020 மார்ச் 01 முதல் 02 வரை 3ஆவது நிரந்­தர செயற்­குழுக் கூட்டம் வெளி­நாட்டு உற­வுகள் அமைச்சில் நடை­பெற்­றது.

தொழில்­நுட்பம், சுகா­தாரம் மற்றும் மனித வள மேம்­பாடு ஆகி­ய­வற்­றி­லான ஒத்­து­ழைப்பு உள்­ள­டங்­க­லாக, விஞ்­ஞானம், தொழில்­நுட்பம் மற்றும் கண்­டு­பி­டிப்பு தொடர்­பான துறையை வழி­ந­டத்­து­வ­தற்கு இலங்­கைக்கு அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. வர்த்­தகம், முத­லீடு மற்றும் அபி­வி­ருத்தி தொடர்பில் பங்­க­ளா­தே­ஷூக்கும், சுற்­றுச்­சூழல் மற்றும் கால­நிலை மாற்றம் தொடர்பில் பூட்­டா­னுக்கும், விவ­சாயம் மற்றும் உணவுப் பாது­காப்பு தொடர்பில் மியான்­மா­ருக்கும், பாது­காப்பு (பயங்­க­ர­வாத எதிர்ப்பு மற்றும் நாடு­க­டந்த குற்றம், அனர்த்த முகா­மைத்­துவம் மற்றும் எரி­சக்தி) தொடர்பில் இந்­தி­யா­வுக்கும், மக்­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்­புகள் (கலா­சாரம், சுற்­றுலா, சிந்­தனை மன்­றங்கள், ஊடகம் போன்­றவை) தொடர்பில் நேபா­ளத்­துக்கும், தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தல் தொடர்பில் தாய்­லாந்­துக்கும் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

பிம்ஸ்­டெக்கின் கீழ் பிராந்­திய ஒத்­து­ழைப்பின் செயன்­மு­றையை திறம்­பட நடத்­து­வ­தற்­கான நிறு­வனப் பொறி­மு­றை­யான பிம்ஸ்டெக் சாச­னமும் இறுதி செய்­யப்­பட்டு, 5ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சிரேஷ்ட அதி­கா­ரிகள் கூட்­டத்தின் 20ஆவது அமர்­வுக்கு தலைமைதாங்­கிய வெளி­வி­வ­கார செய­லாளர் ஆரி­ய­சிங்க, இலங்கை தலை­மையைப் பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து, 20 ஆண்டு பழமை வாய்ந்த இந்த அமைப்பை மீண்டும் புதுப்­பிப்­ப­தற்கு முயன்­ற­தாகத் தெரி­வித்தார்.

இந்த சூழலில், பிம்ஸ்­டெக்கின் எதிர்­கால நட­வ­டிக்­கை­களில் மேல­திக கவனம் செலுத்­தப்­ப­டு­மா­தலால், பிம்ஸ்டெக் சாச­னத்தை இறுதி செய்­வதன் மூல­மா­கவும், உறுப்பு நாடு­க­ளி­டையே ஒத்­து­ழைப்பின் வரை­ய­றுக்­கப்­பட்ட பகு­தி­களை ஒதுக்­கீடு செய்­வதன் மூல­மா­கவும் நிறு­வனக் கட்­ட­மைப்பின் தேவை குறித்து இலங்கை கவனம் செலுத்­தி­யது.

இந்த ஆண்டின் பிற்­ப­கு­தியில் தாய்­லாந்­திற்கு தலைமைப் பத­வியை ஒப்­ப­டைக்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள இலங்கை, உச்­சி­மா­நாட்­டிற்கு முன்­ன­தாக வர்த்­தகம், முத­லீடு, தொழில்­நுட்பம், சுற்­றுலா மற்றும் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தல் ஆகிய துறை­களில் ஒத்­து­ழைப்­புக்­கான உறு­தி­யான வழி­மு­றை­களை இறுதி செய்­வ­தற்கு முயற்­சிப்­பதில் ஆர்­வ­மாக உள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

குற்­ற­வியல் விட­யங்­களில் பரஸ்­பர சட்ட உதவி தொடர்­பான பிம்ஸ்டெக் சாசனம் மற்றும் பிம்ஸ்டெக் தொழில்­நுட்ப பரி­மாற்ற வச­தி­களை நிறு­வு­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஆகி­ய­வற்றை இறுதி செய்­வ­தற்கும் மேல­தி­க­மாக, 2019 ஏப்ரல் மாதத்தில் பிம்ஸ்டெக் உள்­ளி­ணைப்புக் கட்­டத்­தினை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதனை பிம்ஸ்டெக்கின் பொதுச்செயலாளரான தூதுவர் ஷாஹிதுல் இஸ்லாம் பாராட்டினார்.

விரிவான ஒத்துழைப்புக்கான துறைசார் கூட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்த முன்னோக்கில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு வழங்குவதற்கும், பிம்ஸ்டெக் சுதந்திர வர்த்தகப் பகுதியின் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19