பிரதேச சபை பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் கடிதம்  - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 

Published By: Digital Desk 4

05 Mar, 2020 | 10:29 AM
image

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் பெண் உயரதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

இந்தக் கடிதம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வலிதெற்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச சபையின் அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் ஒன்று கட்டப்பட்டுவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த கட்டிடத்திற்கு உரிய அனுமதியை பெறுமாறு பிரதேச சபையின் உபஅலுவலகத்தில் பணியாற்றும் பெண்பொறுப்பதிகாரி கட்டிட உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இரண்டு மூன்று தடவைகள் அறிவுறுத்தல் வழங்கியும் இன்று வரை கட்டிடத்திற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை.

இந்நிலையில் வலிகாமம் தெற்குபிரதேசசபையின் உபஅலுவலக பொறுப்பதிகாரி குறித்த கட்டிடத்தை அப்புறப்படுத்த அனுமதியைச் சபையிடம் கோரியுள்ளார். குறித்த கோரிக்கைக்கு அமைவாக தவிசாளர் பிரதேச சபையின் உரிய அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ளதால் குறித்த கட்டிடத்தை அப்புறப்படுத்துமாறு தவிசாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையிலேயே வலிகாமம் தெற்குபிரதேசசபைக்கு நேற்று எச்சரிக்கை கடிதம் ஒன்று சென்றது குறித்த கடிதத்தில் உடுவில் பகுதியில் அமைந்துள்ள உபஅலுவலகத்தின் பொறுப்பதிகாரிக்கு எச்சரிக்கை விடும்வகையில் குறித்த கடிதம் அமைந்துள்ளது.

அதில்"அதிகாரியான நீங்கள் தேவையில்லாத விடயங்களில் தலையிடவேண்டாம் அவ்வாறு தலையிட்டால் முன்னர் இருந்த பொறுப்பதிகாரிக்கு நடந்ததே உங்களுக்கும் நடக்கும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்பொறுப்பதிகாரி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளைச் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு எதிராக பொறுப்பான அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்படும் போது இவ்வாறான மிரட்டல்கள் வருவதால் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32