7 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று ? : தந்தை, தாய் உட்பட மூவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 05:25 PM
image

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பதுளை அரசினர் வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப்பிரிவில் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய், தந்தை மற்றும் அவர்களது ஏழு மாதக் குழந்தை ஆகிய மூவரும் மேற்படி சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இவர்களில் ஏழு மாதம் நிரம்பிய குழந்தைக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதும் பெற்றோர் அவரை பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இதையடுத்து அக் குழந்தையின் தாயும் தந்தையும் விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் குறித்த மூவரும் தனித்தனியாக விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் மூவரும் தென்கொரியாவில் வசித்து வந்த இலங்கையர்களாவர். தென்கொரியாவில் கொரோனா நோய் பரவுவதை அடுத்து குறித்த மூவரும் அச்சம் கொண்டு தமது சொந்த நாடான இலங்கையின் பண்டாரவளைப்பகுதியில் அம்பிட்டிய என்ற கிராமத்திற்கு கடந்த 27 ஆம் திகதி  வருகை தந்துள்ளனர். 

அவர்கள் வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் 7 மாத குழந்தைக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்தே இம்மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றதா என்று அறியும்பொருட்டு விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதனைக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் ஏனைய நோயாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விசேட மருத்துவ அறையில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் பதுளை அரசினர் வைத்தியசாலையின் சுகாதார பணிப்பாளர் ரன்ஜித் அமரகோன் தெரிவித்தார்.

இதேவேளை, பதுளை வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவிற்கு தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, இவ்வாறு குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தையை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வைத்திய அறிக்கைகள் பெறப்பட்டுள்ள நிலையில் அவை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் குறித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென தெரிவித்த பதுளை வைத்தியசாலை பொலிஸ் பிரிவினர் குழந்தை சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58