சம்பிக்கவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!

Published By: Vishnu

04 Mar, 2020 | 02:50 PM
image

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி, கொழும்பு மேல­திக நீதிவான் காஞ்­சனா நெரஞ்­சனா டி  சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சம்பிக ரணவக்கவுக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதிர்வரும் ஏப்ரல் 26 முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரை நீக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு சந்தீப் என்ற இளைஞன் விபத்­துக்­குள்­ளான விவ­காரத்தில் தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சார­தியை மாற்றி, உண்மையை மறைத்து சாட்­சி­யங்­களை சோடித்து  நீதித்துறைக்கு மோசடி செய்­தமை தொடர்­பி­லான குற்­றச்சாட்டில்  கைதாகி  விளக்­கம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் அமைச்சர் பாட்­டலி சம்பிக்க ரண­வக்க  பிணையில் செல்ல கடந்த டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் அனுமதித்தது. 

25 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான ரொக்கப் பிணை­யிலும் , 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீர பிணை­க­ளிலும் செல்ல கொழும்பு மேல­திக நீதிவான் காஞ்­சனா நெரஞ்­சனா டி  சில்வா  இந்த உத்­த­ரவை பிறப்பித்ததுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணித் தடையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47