மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந் திரனின் பதவி நீடிப்பு தொடர்பில் நிதி அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுப்பாரென அரச தொழில் முயற்சி பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.

குறித்த பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தனது நிலைப்பாட்டை மத்திய வங்கி ஆளுநர்

அர்ஜுன மகேந்திரன் இன்னும் அரசாங்கத்திற்கு அறிவிக்க வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்­திய வங்கி ஆளுனர் விவ­காரம் குறித்து இன்று பெரி­தும் கரு­த்­துக்கள் வெளியாகின்­றன. இது புது விட­ய­மல்ல. ஒரு வரு­ட­கா­ல­மாக இது தொடர்பில் பேசப்­­ப­டு­கின்­ற­து.எவ்­வா­றா­யினும் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்­சரின் ஆலோச­னைக்கு அமை­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­­­சேனவே தீர்­மானம் எடுப்­பார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுனரின் பதவிக்காலம் முடி­வ­டையும் நிலையில் அவர் நீக்­கப்­ப­டு­வாரா இல்லையா என்­ப­து கேள்­விக்­கு­ரி­யா­கவே உள்­ளது. அவரின் பொரு­ளா­தா­ர அபி­வி­ருத்­தி­­த்­கான பங்­க­ளிப்பு மற்றும் மத்­திய வங்­கியை நிர்­வ­கித்த முறைமை தொடர்­பில் முழு­மை­யாக ஆராய்ந்த பின்­னரே ஜனா­திபதி இந்த தீர்­மானத்தை எடுப்பார்.

இவ்வா­றி­ருக்­கையில் தேசிய அர­சாங்­கத்தில் இணைந்­துக்­கொண்­டுள்ள அமைச்­ச­ரவை அந்­தஸ்துள்ள பத­விகளில் இருக்­கின்­ற­வர்கள் இவ்­வாறு ஐக்­கிய தேசிய கட்சி ,சுதந்­திர கட்சி என்று வேறுபட்ட கருத்­துக்ளை வெளியிடு­வது கவ­லைக்­கு­ரி­ய காரணியாகு­ம். அத்­துடன் மத்­திய வங்கு ஆளுனர் கோப் குழுவின் செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைக்­க­வில்­லை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் எம்­.பி.யும் கோப் குழுவின் தலை­வ­ருமான சுனில் ஹந்து­­னெத்தி தெரி­வித்­துள்­ளார்.

குழுவின் தலைவர் என்ற வகையில் விசா­ர­ணைக்கு ஓத்­து­ழைப்பு வழ­ங்­கா­தவர் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான பூரண அதி­காரம் அவ­ருக்கு வழங்­கப்­பட்­டு­ள்­ள­து என்றார்.

புதிய அமைச்­சு பத­விகள்

புதிய அமைச்சு பத­வி­களை வழங்கி நாம் எவ­ரையும் வற­வேற்­க­வில்லை. அவ்­வாறு வரு­ப­வர்­க­­ளுக்கு அமைச்சு பதவி வழங்­­க நாம் நினைத்­தி­ருந்தால் தேசிய அர­சாங்­கத்­தை விடுத்து தனி­யாக ஆட்சி அமை­த்­தி­ருக்க முடியும். நபர்­களை விலை கொடுத்த வாங்கிஅர­சாங்கம் அமைக்கும் செயற்­பா­டு­க­­ளுக்கு எதிர்­கா­லத்­தில் இட­மி­ருக்­காது என்­றார்­.