இலங்கை - மே.தீ.வுகள் அணிகளுக்கிடையேயான முதல் 20:20 போட்டி இன்று

Published By: Vishnu

04 Mar, 2020 | 01:20 PM
image

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. 

இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை அணியானது 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி மேற்கிந்தியத்தீவுகள் அணியை வைட் வோஷ் செய்தது.

இந் நிலையில் அந்த வெற்றியின் வேகத்துடன் கண்டி பல்லேகல மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது இலங்கை.

சர்வதேச இருபதுக்கு : 20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 8 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு இருபதுக்கு : 20 தொடருக்கு லசித் மலிங்க தலைமை தாங்குகின்றார். 

அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குசல் பெரேராவும் இருபதுக்கு - 20 போட்டிகளில் ஆபத்தான துடுப்பட்டா வீரர்களாக கருதப்படுகிறார்கள். 

அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஒருநாள் தொடரின் போது தங்கள் துடுப்பாட்டத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்த திசர பெரேரா மற்றும் வர்னிந்து ஹசரங்க ஆகியோரும் மூன்று போட்டிகளிலும் தங்களது பங்களிப்பை செவ்வனவே ஆற்றியிருந்தனர்.

இலங்கை அணியில் இன்றைய தினம் மூன்று இடங்களில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக திருமண பந்தத்தில் இணைந்துள்ள குசல் பெரேரா இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரம் நிரோஷன் டிக்வெல்லா திமுத் கருணாரத்னவுக்கு பதிலாக அவிஷ்கா பெர்னாண்டோவுடன் ஆரம்ப வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

அத்துடன் நுவான் பிரதீப்பிற்கு பதிலாக லசித் மலிங்காவும், தாசுன் ஷானகா மற்றும் ஷெஹான் ஜெயசூரியா ஆகியோரும் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியை பொருத்தவரையில் இருபதுக்கு : 20 கிரக்கெட் போட்டிகளில் அவர்களது அதிரடிக்கு பஞ்சம் இருக்காது எனினும் இலங்கையுடனான ஒருநாள் தொடரின் தாக்கம் காரணமாக அவர்கள் இலங்கை அணியை எவ்வாறு சமாளிப்பார்கள் என்பது கேள்விக் குறியாகவுள்ளது.

இதேவேளை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட அணியின் தலைவர் கிரான் பொல்லார்ட் விளையாடவுள்ள 500 ஆவது இருபதுக்கு : 20 (ஐ.சி.சி. உட்பட அனைத்து) போட்டி இதுவாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை ஒன்பது சர்வதேச இருபதுக்கு : 20 போட்டிகளில் விளையாடிவுள்ளன. அதில் இலங்கை அணி 6 வெற்றியையும் மேற்கிந்தியத்தீவுகள் அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit : SLC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35