பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 01:11 PM
image

பதுளை ஹாலி-எலை பிரதேச செயலகத்திற்கு முன்னாளுள்ள பஸ் தரிப்பிடத்திலிருந்து நபரொருவரின் சடலத்தை ஹாலி-எலைப் பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

ஹாலி-எலைப் பகுதியின் செரண்டிப் தோட்டப் பிரிவைச் சேர்ந்த டி. பவானந்தன் என்ற 32 வயதுடையவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக  ஹாலி-எலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

அத்துடன் குறித்த நபர் கொழும்பு தனியார் பாதுகாப்பு சேவைப் பிரிவில் சேவையாற்றி வந்தவரென்றும் இவர் அதிகாலை கொழும்பிலிருந்து பதுளை செல்லும் பஸ்ஸில் சென்று ஹாலி-எலையில் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த மரணத்திற்குக் காரணம் தெரியவில்லையென்றும், மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட சடலத்தின் சட்டைப் பைக்குள்ளிருந்த தேசிய அடையாள அட்டை மற்றும் தனியார் பாதுகாப்பு சேவை அடையாள அட்டை உள்ளிட்ட பஸ் டிக்கட் ஆகியனவற்றை பொலிசார் சடலத்துடன் மீட்டுள்ளனர்.

இம்மரணம் எவ்வகையில் ஏற்பட்டதென்பது குறித்து அறியச் சடலம் ஹாலி-எலை பிரதேச அரசினர் வைத்தியசாலை பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04