யாழில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்க ஏற்பாடு - யாழ்.அரசாங்க அதிபர் 

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 12:20 PM
image

யாழ்.மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இம்மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஒரு வாரம் முழுவதும் பிராந்திய சுகாதார வைத்தய அதிகாரியின் கீழ் நடைபெறவுள்ளது. 

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் நடைபெறுவதுடன் கரைநகர் ஊர்காவற்றுறை மருதங்கேணி தவிர்ந்த ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்து நாட்களும் நடைபெறவுள்ளது. 

13 ஆம்திகதி பாடசாலைகளிலும் மற்றும் பாடசாலைச் சூழல்களில் நுளம்புக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுகளும் நீர் தேங்கி நிற்கும் நிலைகள் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனைய நாட்களில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் இத்தகைய பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. 15 ஆம் திகதி அனைத்து இடங்களிலும் சிரமதான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இத்தகைய நிகழ்வுகளுக்காக மாநகர சபைப் பகுதியில் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் 10 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுச்சுகாதார பரிசோதகர் முப்படையினர் பொலிஸார் , கிராம அலுவலர் அனைவரது ஒத்துழைப்புக்களுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது. 

இதற்காக அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் பிரதேச சபை தவிசாளர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05