அதிகரித்துவரும் முழங்கால் மூட்டு வலிக்கான தீர்வு

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 11:42 AM
image

இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உலகளவில் முழங்கால் மூட்டுவலியால் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தெற்காசிய நாடுகளில் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை காட்டிலும், பெண்கள் இரண்டு மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டிய அவசியமான சூழல் உருவாகி இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் டி பற்றாக்குறை, கால்சிய சத்து குறைபாடு, சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றுவது, உடல் எடை சீராக பராமரிக்காமல் இருப்பது என பல்வேறு காரணங்களை பட்டியலிடலாம்.  இன்றும் பெரும்பாலான முதியவர்கள் முழங்கால் மூட்டு வலி குறைய முறையான சிகிச்சை பெறாமல், தற்காலிக நிவாரணத்தை தான் பெற்று வருகிறார்கள். 

இதன் காரணமாகவும் அவர்களுக்கு மூட்டு மாற்று சத்திரசிகிச்சை அவசியமாகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வயதான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மேற்கொள்ளப்படும் முழங்கால் மூட்டு வலிக்குரிய சிகிச்சை பாதுகாப்பானதாக இருப்பதால், மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றினால் இத்தகைய பிரச்சனையில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.

டொக்டர் ராஜ்கண்ணா.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32