கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இல்லாத போது அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியும் :  அமெரிக்க நீதிமன்றம்

Published By: R. Kalaichelvan

03 Mar, 2020 | 06:25 PM
image

தற்போதைய இலங்கையின் ஜனாபதியாக பதவி வகிக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்காத சமயத்தில் பின்னர் அவருக்கெதிராக வழக்கு தொடர முடியுமென லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க  நீதிமன்றம் கோத்தாபயவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பில் அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 

அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க சார்பில் இவ் வழக்கு தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையம் வாதிட்டது. இத் தீர்ப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அஹிம்சா விக்கிரமதுங்க இதுவொரு வெற்றியென்றும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கான செய்தியென்றும் தெரிவித்துள்ளார். 

தற்போது கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமை பொறுப்புக்கூறலை தாமதப்படுத்துமே அன்றி தடுக்க முடியாது  எனவும் அவரால் பாதிக்கப்பட்ட எம் போன்றவர்கள் நீதிக்காக போராடுவதை ஒருபோதும் கைவிடப்போவதில்லையென அஹிம்சா மேலும் தெரிவித்தார். 

லசந்த விக்கிரம கொலை தொடர்பில் இதுவரை இலங்கை அரசு ஏற்கவோ அல்லது மறுதலிக்கவோ இல்லையென இவ் வழக்கில் வாதாடிய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையத்தின் சட்டப் பணிப்பாளர் காமென்  செயுங் தெரிவித்தார்.

அஹிம்சா விக்கிரமதுங்க இவ் வழக்கை மீண்டும் தொடர முடியும் என்பது குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46