சஜித் கூட்டணியில் இணையுமாறு ரணிலுக்கு அழைப்பு : துஷார

Published By: R. Kalaichelvan

03 Mar, 2020 | 05:10 PM
image

(ஆர்.விதுஷா)

சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய  மக்கள் சக்தி  கூட்டணியில் ரணில் விக்ரமசிங்க இணைய வேண்டும் என அழைப்பு விடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன , இனவாத்தை தூண்டி ஆட்சிக்கு வந்து  நாட்டு மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தினை வெற்றி கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது   அவசியமானதெனவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர்  மேலும் கூறியதாவது ,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மையமாக கொண்டு  இனவாத்தை தூண்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டு மக்களை  ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. 

இம்முறை பொதுத்தேர்தலை வெற்றிகொள்வற்கான ஆயுதமாக ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதாக கூறி   வாக்குகளை பெற்று அவர்களையும் இறுதியில் ஏமாற்றும் நடவடிக்கைளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.  இளையோர் வாக்குக்குகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கை பிரஜைகளின் வாக்குகளை பெற்றே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை  இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. 

பொலன்னறுவையில் அரச பயங்கரவாதம் நிலவுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன கூறிக்கொள்கின்றார். பொலன்னறுவையில் அல்ல மாறாக நாடளாவிய ரீதியில் அரச பயங்கரவாத நிலைமை உருவாகியுள்ளமை தொடர்பில் அவர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

வேட்பாளர் தெரிவு  இடம் பெறும் போது ஊழல் வாதிகளுக்கு இடமில்லை  என்ற கருத்தினை அரசாங்க  தரப்பினர் கூறி வருகின்னறனர். ஊழல் வாதிகள் ,கொள்ளையர்கள் , பாலியல் குற்றச்சாட்டு உடையவர்கள் அனைவரும் எந்த தரப்பில்  உள்ளார்கள் என்பது தொடர்பில் ஆராய வேண்டியது அவசியமானதாகும்.

இவ்வாறான நடவடிக்களை எதிர்த்து புதிய பாதையில்  பயணிப்பதை நோக்காக  கொண்டு ஐக்கிய  மக்கள் சக்தி கூட்டணியை சஜித் பிரேமதாச  தலைமையில்  உருவாக்கியுள்ளோம். இதில்  ஐக்கிய  தேசிய  கட்சியின் தலைவர் ரணில்  விக்கிரமசிங்கவையும் இணைந்து கொள்ளுமாறு  அழைப்பு விடுக்கின்றோம். ராஜபக்ஷ  தரப்பினரை வெற்றி கொள்வதற்காகவே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.  ஆகவே , இதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02