விலகியது இலங்கை: நிராகரிக்கப்பட்டது யோசனை!

Published By: J.G.Stephan

03 Mar, 2020 | 03:58 PM
image

இலங்­கையை பொறுத்­த­மட்டில் ஒப்­பந்­தங்­களை கிழித்­தெ­றி­வதும் உடன்­பா­டு­களை கைவி­டு­வதும் இணக்­கப்­பா­டு­களை மீறு­வதும் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற தவ­று­வதும் தொடர்­க­தை­யா­கவே இருந்து வரு­கின்­றது. இனப்­பி­ரச்­சினை தொடர்பில் யுத்­தத்­துக்கு முன்­னரும் சரி யுத்­தத்­துக்குப் பின்­னரும் சரி மேற்­கொள்­ளப்­பட்ட எந்­த­வொரு ஒப்­பந்­தமும் இணக்­கப்­பாடும் சரி­யான வகையில் கடைப்­பி­டிக்­கப்­ப­டா­தது மாத்­தி­ர­மன்றி அவை கைவி­டப்­பட்­ட­மையே வர­லா­றாக இருந்து வரு­கின்­றது. 

அந்த வகையில் இலங்கை -– இந்­திய ஒப்­பந்தம் தொடக்கம் இதுவரை எவை­யுமே முறை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அர­சியல் தலை­வர்கள் அவ்­வப்­போது வெளி­நா­டு­க­ளுக்கு செல்லும் சந்­தர்ப்­பங்­களில் இனப் பிரச்­சினை தீர்வு தொடர்பில் பல்­வேறு உறுதி மொழி­களை வழங்­கி­னாலும் நாள­டைவில் அவை செல்­லாக்­கா­சாகவே போய்­வி­டு­கின்­றன. இது சர்­வ­தேச அரங்கில் இலங்கை தொடர்பில்  தப்­ப­பிப்­பி­ராயம் மேலோங்­கவே வழி­வ­குப்­ப­தாக இருக்­கு­மென அர­சியல் ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

கடந்த காலங்­களில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­களை அடுத்து இலங்கை சர்­வ­தேச ரீதியில் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளா­ன­துடன் மிகுந்த அப­கீர்த்­தியை எதிர்­நோக்­கவும் நேர்ந்­தது. அவை மெது­வாக மறைந்து மீண்டும் நாட்டின் மீது சர்­வ­தேச கவ­னங்கள் செறிந்து போயுள்ள நிலையில் இலங்கை பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்தும் விலகி தமி­ழர்­களின் உணர்­வு­களைத் தட்­டிக்­க­ழிக்­கு­மானால், அது நாட்டை மீண்டும் சவா­லுக்­குட்­ப­டுத்­தவே வழி­வ­குப்­ப­தாக இருக்கும் என்­பதே பொது­வான அபிப்­பி­ராயம். 

ஜெனீவா விவகாரம்

இதே­வேளை, ஜெனீவா மனித உரி­மைகள் பேரவை விவ­காரம் தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. பேர­வையில் உரை­யாற்­றிய வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்­தன இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணை­யா­னது நீதிக்குப் புறம்­பா­னது எனவும் இலங்கை பாது­காப்புப் படை­யி­னரை நிந்­திக்கும் வகையில் அது அமைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், அமைச்­ச­ர­வை­யையோ பாரா­ளு­மன்­றத்­தையோ கலந்­தா­லோ­சிக்­காத வகை­யி­லேயே அப் பிரே­ர­ணைக்கு முன்­னைய அரசு இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ள­தாக குற்றம் சாட்­டி­யுள்ளார். அத்­துடன், அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான இந்த பிரே­ர­ணையில் இருந்து இலங்கை விலகிக் கொள்­வ­தா­கவும் அவர் அறி­வித்­தி­ருக்­கிறார். 

ஆணைக்குழு

அதே­வேளை  இலங்கை அர­சாங்­க­மா­னது நிலை­யான அமை­தியை பேணும் முக­மாக ஜன­நா­யக ரீதியில் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை  உறுதி செய்யும் வகையில் நீதி­ய­ரசர் ஒருவர் தலை­மையில் ஆணைக்­குழு ஒன்றை அமைக்கும் என்றும் தெரி­வித்­துள்ளார். 

குறித்த பிரே­ர­ணைக்கு இலங்கை ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தி­யின்­றியே அனு­ச­ரணை வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

43ஆவது ஜெனீவா கூட்­டத்­தொ­டரின் 3ஆவது நாள் அமர்வில் இலங்கை சார்பில் அமைச்சர் தினேஸ் குண­வர்­தன கலந்து கொண்டு உரை­யாற்­றி­ய­துடன் இந்த அறி­விப்­பையும் அவர் விடுத்தார். 

அங்கு உரை­யாற்­றிய அவர், ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் 2012, 2013, 2014ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்பில் பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. முன்­னைய நல்­லாட்சி அரசு 2015ஆம் ஆண்டு இலங்கை குறித்த பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­யது. 

இந்தப் பிரே­ர­ணையின் ஊடாக எந்த நட­வ­டிக்­கை­யையும் இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக முன்­னெ­டுக்க முடி­யாது. இது இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பையும் மக்­களின் இறை­மை­யையும் மீறு­கின்­றது.

இறைமைக்கு அவமதிப்பு

அத்­துடன், அது தொடர்பில் அமைச்­ச­ர­வைக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அமைச்­ச­ர­வையின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்­றத்­துக்கும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தியும் பெறப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மாக இலங்கை அரசின் இறை­மை­யையும் மதிப்­பையும் அவ­ம­திப்­ப­தாக அமைந்­துள்­ளது. 

மேலும், இலங்­கையின் தேசிய இறை­மையை குறைத்து மதிப்­பி­டு­வ­தா­கவும் உள­வுத்­து­றையின் செயற்­பா­டு­களை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­துள்­ளது. இதன் கார­ண­மா­கவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றன என்றார். 

மேலும், கடந்த வருடம் நவம்­பரில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் தீர்க்­க­மான வெற்­றி­யுடன் இலங்கை மக்கள் வேறு­பட்ட பாதை­யொன்றில் முன்­னோக்கிச் செல்­வ­தற்­கான சமிக்­ஞை­யொன்றை வழங்­கி­யி­ருந்­தனர். அதே­வேளை, இலங்கை நீடித்த சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்­பாக அர்ப்­ப­ணிப்­புடன் இருந்து வரு­கின்­றது எனக் குறிப்­பிட்­டுள்ள அமைச்சர், இலங்கை அர­சாங்­கத்­திலும் பார்க்க இந்த முயற்­சியில் அதி­க­ள­வுக்கு எவரும் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­க­மு­டி­யாது எனவும் குறிப்­பிட்­டுள்ளார். 

பாராட்ட தவறிய ஐ.நா

அத்­துடன், இலங்­கை­யா­னது பொறுப்­புக்­கூறல், மனித உரிமை, நிரந்­தர சமா­தானம், நல்­லி­ணக்கம் போன்­ற­வற்றை அடைய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் என்றும் கூறி­யுள்ளார். 

அதே­வேளை, மிகக் கவ­ன­மான சம­நி­லை­யான நல்­லி­ணக்க நட­வ­டிக்கை ஒன்றின் ஊடாக ஸ்திரத்­தன்­மை­யையும் மனி­தா­பி­மான ரீதி­யான ஆறு­த­லையும் உறு­தி­யான சமா­தா­னத்தை அடை­வ­தற்கும் மற்றும் பயங்­க­ர­வா­தத்­தை தோற்­க­டிப்­ப­தற்கும்  இலங்கை அர­சாங்கம் மேற்­கொண்ட முயற்­சி­க­ளையும் பாராட்டுவதற்கு ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேரவை தவ­ற­விட்டது எனவும் அவர் குற்றம் சாட்­டி­யுள்ளார். 

அத்­துடன், ஐக்­கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்­பு­க­ளுடன் இலங்கை தொடர்ந்தும் செயற்­படும் எனவும் மனித உரி­மைகள் தொடர்­பான ஆணைகள், அமைப்­புகள், பொறி­மு­றைகள், கொள்­கை­களைப் பேணும்  அதே­வேளை தேவை­யான தமது உத­வி­க­ளையும் நாடும் என்றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்­த­னவின் மேற்­படி உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பை­ய­டுத்து, பல்­வே­று­பட்ட கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. ''ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து இலங்கை விலகிச் செல்­வது என்­பது எம்மைப் பொறுத்­த­மட்டில் ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மல்ல. இது நாம் எதிர்­பார்த்த ஒன்­றாகும். இது­வ­ரையில் தமி­ழர்­களை ஏமாற்றி வந்த இலங்கை அர­சாங்கம் இன்று சர்­வ­தே­சத்­தி­டமும் அதே உபா­யத்தை கையாள முற்­ப­டு­கின்­றது'' என தமிழர் இயக்­கத்தின்  செயற்­பாட்­டா­ளரும் மனித உரி­மைகள் பேர­வையின் இணைப்­பா­ள­ரு­மான  நிஷா பீரிஸ் தெரி­வித்­துள்ளார். 

அவர் மேலும் கூறு­கையில், காலம் கால­மாக இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்­களை ஏமாற்றி வரும் நிலைதான் காணப்­ப­டு­கின்­றது. இப்­போது அவர்கள் ஒரு­படி மேலாகச் சென்று சர்­வ­தேச அரங்கில் கூட தமது இந்த தந்­தி­ரோ­பா­யங்­களை பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்கள் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். 

இதே­வேளை, மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் இலங்­கையின் இச் செயலை வெகு­வாக விமர்­சித்­துள்­ளது.

கன்னத்தில் விழுந்த அறை

இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்த ஐ.நா  மனித  உரி­மைகள் பேரவை தீர்­மா­னத்­தி­லி­ருந்து விலகிக் கொள்­வ­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­மை­யா­னது, பாதிக்­கப்­பட்ட மக்­களின் கன்­னத்தில் விழுந்த அறைக்கு சம­மா­ன­தாகும் எனவும் ஐ.நா.வின்  உயர் மனித உரி­மைகள் அமைப்­புக்­கான அவ­ம­திப்பு எனவும் கூறி­யுள்­ளது.

மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் மேலும் குறிப்­பி­டு­கையில், தங்­களை தாங்­களே முட்­டா­ளாக்கிக் கொள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை இட­ம­ளிக்கக் கூடாது. 

பதி­ல­ளிக்கும் கடப்­பாடு தொடர்­பாக அர்த்­த­புஷ்­டி­யான நட­வ­டிக்­கையை ராஜபக் ஷாக்கள் எடுப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இல்லை. அதே­வேளை, அர­சாங்­கத்தின் இந்த நகர்­வா­னது மனித உரி­மைகள் பேரவை இறு­தியில் போர்க்­கால குற்­றங்கள் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ர­ணையை ஏற்­ப­டுத்தும் தேவையை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யுள்­ளது என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

நீதி வேண்டும்

இதே­வேளை, பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து வில­கு­வ­தாக இலங்கை அர­சாங்கம் அறி­வித்­து­விட்ட நிலையில், இனி­யா­வது சர்­வ­தேச சமூகம் எமக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என காணாமல் போனோரின் உற­வி­னர்கள்  ஜெனீ­வாவில் தெரி­வித்­துள்­ளனர். ஜெனீவா பேர­வையில் 43ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மான நிலையில் ஜெனீவா சென்­றி­ருந்த வடக்கு கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் உற­வு­களின் சங்­கத்தின் பிர­தி­நி­திகள் அங்கு நடை­பெற்ற உப­குழு கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளனர். 

அங்கு அவர்கள் மேலும் கூறு­கையில், ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமும் சர்­வ­தே­சத்­தி­டமும் நீதியைப் பெறவே நாங்கள் இங்கு வந்­துள்ளோம். சர்­வ­தேசம் இனி­யா­வது எமக்கு நீதியை பெற்­றத்­தர வேண்டும். காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை நாங்கள் நம்­ப­வில்லை.  கடந்த அர­சாங்கம் எம்மை ஏமாற்­றி­யது. தற்­போ­தைய அர­சாங்கம் தாங்கள் வில­கு­வ­தாக நேர­டி­யா­கவே கூறி­விட்­டது.  எனவே குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு இந்த விவ­காரம் கொண்டு செல்­லப்­பட வேண்டும். காணாமல் போனோர் இறந்து விட்­டனர் என்று கூற முடி­யாது. நாங்கள் எங்கள் பிள்­ளை­களை ஒப்­ப­டைத்தோம். அவர்­களை மீட்டுத் தர­வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

கனடா – பிரிட்டன் அதிருப்தி

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் ஒரு­த­லைப்­பட்­ச­மாக விலகிக் கொண்­டது தொடர்பில் பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் தனது கடு­மை­யான அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளன. ஜெனீ­வாவில் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்­த­னவை சந்­தித்துப் பேசிய பிரிட்டன் வெளி­வி­வ­கார அலு­வ­லக இரா­ஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட், இலங்கை மனித உரி­மை­களை பாது­காக்க வேண்டும் எனவும் நல்­லி­ணக்கம், நீதி மற்றும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ளார். 

இந்­நி­லையில் ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையின் 43 ஆவது அமர்வில் கடந்த திங்­கட்­கி­ழமை உரை­யாற்­றிய ஐ.நா செய­லாளர் நாயகம் அன்­டோனியோ கட்­டரஸ், மனித உரி­மைகள் பேர­வையின் உயர்ஸ்­தா­னிகர் மிச்செல் பச்லெட் மற்றும் அவரின் அலு­வ­லகம் முன்­னெ­டுத்து வரும் பணி­க­ளுக்கு பாராட்டு தெரி­வித்­துள்­ள­துடன், உலகில் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான அவரின் அனு­ப­வமும் சமு­தா­யத்­துக்­கான அவரின் புரிந்­து­ணர்வும் தனித்­து­வ­மா­னவை என குறிப்­பிட்­டுள்ளார்.

சமூகம்  சுதந்­தி­ர­மாக வளர்ச்­சி­ய­டை­வ­தற்கு மனித உரி­மைகள் உத­வு­கின்­றன. அந்த வகையில் பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளது சமத்­து­வ­மான வாழ்க்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து பாது­காக்­கவும் அவர்கள் எதிர்­நோக்கும் அசெ­ள­க­ரி­யங்­களை குறைக்­கவும் அனை­வ­ருக்­கு­மான நீதியை உறுதி செய்­யவும் அனை­வரும் முன்­வர வேண்டும். மனித உரி­மை­களே மனி­தனின் உயர்ந்த அபி­லா­ஷை­யாக விளங்­கு­வ­தாக  உல­க­ளா­விய மனித உரிமை பிர­க­டனம் கூறு­கி­றது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

கால­னித்­துவ ஆட்­சியும் நிற­வெ­றியும் நிறை­வுக்கு வந்­துள்­ளன. அடக்கு முறைகள் வீழ்ச்சி கண்­டுள்­ளன. ஜன­நா­யகம் எங்கும் பர­வி­யுள்­ளது. ஒரு தலை­மு­றை­யாக 100கோடி மக்கள் வறு­மை­யி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். குடி­நீரை பெற்­றுக்­கொள்­வதில் பாரிய முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. சிசு மரணம் வீழ்ச்சி கண்­டுள்­ளது.  சகல சமூ­கமும்  மனித உரிமை அமைப்­பினால் பய­ன­டைந்­துள்­ளது. இருந்­த­போ­திலும் மனித உரிமை தொடர்ந்தும் சவால்­மிக்­க­தாக உள்­ளது. இதி­லி­ருந்தும் எந்த நாடும் விதி­வி­லக்­கல்ல.

இறைமை போர்வையாகக் கூடாது

ஒவ்­வொரு நப­ரு­டைய பிறப்­பு­ரி­மை­யா­கவும் ஒவ்­வொரு நாட்டின் நல­னா­கவும் மனித உரி­மைகள் விளங்­கு­கின்­றன. அவை ஸ்திரத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் ஒற்­று­மை­யையும் கட்­டி­யெ­ழுப்­பு­கின்­றன. சகல தரப்­பையும் உள்­ளீர்த்து வளர்ச்­சியை மேம்­ப­டுத்­து­கின்­றன. அவை ஒரு­போதும் மறை­முக நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுப்­ப­ன­வாக இருக்கக் கூடாது. 

இதே­வேளை, ஒரு போதும் மனித உரிமை மீற­லுக்கு தேசிய இறைமை  ஒரு போர்­வை­யாக இருக்­கக்­கூ­டாது. மனித உரி­மை­க­ளுக்கும் தேசிய இறை­மைக்­கு­மி­டையில் தவ­றான விதத்தில் அமையும் இரு­வேறு பிரி­வு­று­கையை நாம் வெற்றி கொள்­வது அவ­சியம். 

மனித உரிமை மற்றும் தேசிய இறைமை ஆகி­யன ஒன்­றுடன்  ஒன்று இணைந்து செல்ல வேண்டும். மனித உரிமை மேம்­ப­டுத்தல்  நாடு­க­ளையும் சமூ­கங்­க­ளையும் வலுப்­ப­டுத்­து­கின்­றது. அதன் மூலம் இறை­மையை வலுப்­ப­டுத்த முடியும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இலங்­கையின் வில­கலின் தாக்­கத்தை அவ­ரது உரை பிர­தி­ப­லிப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

மனித உரிமையை உறுதிசெய்க

இதே­வேளை, சக­ல­ரி­னதும் மனித உரி­மை­களை மீள உறு­திப்­ப­டுத்­து­மாறு ஐ.நா மனித உரி­மைகள் பேரவை உயர்ஸ்­தா­னிகர் கோரிக்கை விடுத்­துள்ளார். அத்­துடன் சிறப்­பான முன்­னோர்­க­ளாக இருக்க நாம் எம்மை தயார்­ப­டுத்த வேண்டும். இளம் வய­தி­ன­ருக்கும் எதிர்­வரும் தலை­மு­றைக்கும் நாம் சிறந்த எடுத்­துக்­காட்­டாக விளங்க வேண்டும். அதன் மூலமே கெள­ரவம், சுதந்­திரம், சமா­தா­னத்­துடன் உலகம் சிறப்­ப­டைய முடியும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

ஜெனீவா தீர்­மா­னத்தின் இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் வில­கிக்­கொண்­ட­மை­யா­னது மக்கள் மத்­தியில் பல்­வேறு உணர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. 

தாங்கள் பத­விக்கு வந்தால் இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து விலகிக் கொள்­வ­தா­கவும் கடந்த நல்­லாட்சி அரசே நாட்­டையும் இரா­ணு­வத்­தி­ன­ரையும் காட்டிக் கொடுத்து விட்­ட­தா­கவும் கடந்த தேர்தல் பிர­சா­ரத்தின் போது மஹிந்த தரப்பு குற்றச்சாட்­டு­களை அடுக்­கி­யி­ருந்தது. இதன் பின்­ன­ணி­யி­லேயே ஜெனீவா கூட்டத் தொட­ரி­லி­ருந்தும் இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்தும் வில­கு­வ­தாக அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13