அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு

Published By: Digital Desk 4

03 Mar, 2020 | 03:34 PM
image

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டார்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை (6) மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

வடமாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளது.

இவ்விடையம் வடமாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை(3) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் 06.03.2020 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த கவனயீர்ப்புப் போராட்ட நடைபெறும்.  இப்போராட்டமானது மன்னார் நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும்.

இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவதுடன் மிகவும் கடினமான வகையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றார்கள்.

குறிப்பாக யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்கள் அரசியல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள். 

குறிப்பாக அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டு ஆண்டாண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள்.  அவர்களது நெடுங்கால தடுத்து வைப்பினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள்.

குறிப்பாக குடும்பத்தினை தலைமைதாங்கும் பெண்கள் பல இன்னல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். 

இந்நிலையில் சிறையில் நீண்ட காலம் வாடும் இவர்களது குடும்ப உறுப்பினர்களினது விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

 ஆகவே மகளிர் தினத்தை முன்னிட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளது விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களும், பெண்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களும் ஒன்றிணைந்து ஒர் கவனயீர்ப்பை செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒர் அணியாக செயற்பட அனைவரையும் அழைக்கின்றோம்.என குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34