சட்டத்தரணியாகும் ஜோதிகா

Published By: Daya

03 Mar, 2020 | 01:00 PM
image

ஜோதிகா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஜே.ஜே .பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா சூர்யா நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. இப்படத்தில் ஜோதிகாவுடன் மூத்த இயக்குனர்களான கே பாக்யராஜ், இரா. பார்த்திபன், ஆர் பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

2டி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறை வடைந்ததை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஜோதிகா சட்டத்தரணியாக இறுக்கமான முகத்துடன் காணப்படுகிறார். இவரின் இந்த தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக், டிரைலர் போன்றவை வெளியிடப்படாமலேயே இப்படத்தின் வெளியீடு மார்ச்  27 ஆம் திகதி  என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

 திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்கும் ஒன்பதாவது படம் இது என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடத்திற்கு மூன்று படம் இவரது நடிப்பில் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராட்சசி படத்தில் ஆசிரியை கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது போல், இந்தப் படத்தில் சட்டத்தரணி கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஜோதிகா ஈர்ப்பார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37