"சஜித் தலை­மை­யி­லான கூட்­டணி ஆளும் கட்­சிக்கு பெரும் சவா­லே..!": சென்­னையில் ஹக்கீம் சூளுரை

Published By: J.G.Stephan

03 Mar, 2020 | 12:35 PM
image

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக களம் கண்ட சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சக்தி கூட்­ட­ணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்­கின்றோம். இக்­கூட்­டணி ஆளும் கட்­சிக்கு பெரும் சவா­லாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக நேற்று இந்­தி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்ட­ஹக்கீம் சென்னை விமான நிலை­யத்தில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேரா­சி­ரியர் கே.எம். காதர் மொஹிதீன், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொரு­ளாளர் ஆசாத், மாவட்ட சிறு­பான்மை இணைச் செய­லாளர் இப்­ராஹிம் கனி, திருச்சி ஊட­க­வி­ய­லாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகி­யோர்கள் ரவூப் ஹக்­கீ­முக்கு பொன்­னாடை போர்த்தி விமான நிலை­யத்தில் வர­வேற்­ப­ளித்­தனர்.

அங்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு அளித்த பதில்கள் வரு­மாறு:

கேள்வி: பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. தேர்­தலில் உங்­க­ளது நிலைப்­பாடு எப்­ப­டி­யி­ருக்கும்?

பதில்: திங்­கட்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­கி­றது. கடந்த தேர்­த­லின்­போது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக களம் கண்ட சஜித் பிரே­ம­தாச தலைமை­யி­லான கூட்­ட­ணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்­கின்றோம். இக்­கூட்­டணி ஆளும் கட்­சிக்கு பெரும் சவா­லாக இருக்கும்.

கேள்வி: இந்­திய குடி­யு­ரிமை சட்டத்துக்கு எதி­ரான போராட்டம் குறித்த உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில்: இந்­தி­யாவில் குடி­யு­ரிமை சட்டம் குறித்த போராட்டம் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது. இந்தப் போராட்டம் மிகவும் கவ­லைக்­கு­ரி­யது. இந்தப் போராட்டம் வெற்­றி­பெற வேண்டும். இந்த சட்­ட­மூலம் தொடர்­பாக தொப்­புள்­கொடி உற­வு­க­ளான இலங்­கையில் வாழ் மக்­க­ளா­கிய நாங்­களும் கவலை கொள்­கிறோம்.

கேள்வி: தமிழில் தேசிய கீதம் பாடு­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது குறித்து என்ன கூறு­கி­றீர்கள்?

பதில்: ஒட்­டு­மொத்­த­மாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது பிழை­யான தகவல். உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்ச்­சி­களில் சிங்­கள மொழியில் பாடு­வ­துடன் தமிழ் மொழி­யிலும் தேசிய கீதம் பாடு­வதை முன்­னைய அர­சாங்­கத்தில் நாங்கள் வழ­மை­யாகக் கொண்­டி­ருந்தோம். அந்த வழ­மையை தற்­போ­தைய அர­சாங்கம் மாற்றி, சிங்­க­ளத்தில் மட்­டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்று உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றது. நல்­லி­ணக்கம் கார­ண­மாக கொண்­டு­வ­ரப்­பட்ட அந்த வழமை தற்­போது மாற்­றப்­பட்­டுள்­ளதால், அது தமி­ழர்­களின் மனதை புண்­ப­டுத்­தி­யுள்­ளது.

கேள்வி: இலங்­கையில் போர்க்­குற்றம் தொடர்­பாக இது­வரை விசா­ரணை நடை­பெ­ற­வில்லை என ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர்  கவலை தெரி­வித்­தி­ருக்­கிறார். இனி­யேனும் அந்த விசா­ரணை நடை­பெ­றுமா?

பதில்: இலங்­கையில் தற்­போ­துள்ள அரசு ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் கூட்­டாக நிறை­வேற்­றிய பிரே­ர­ணையில் இருந்து வில­கு­வ­தற்கு  தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. இந்த நட­வ­டிக்கை சர்­வ­தேச மட்­டத்தில் இலங்கை அரசு எடுத்து வரும் நல்­லெண்ண நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடுமோ என்ற அச்சம் நில­வு­கி­றது.

இலங்­கையில் நடை­பெற்ற போரின்­போது போர்க்­குற்­றங்கள் நடை­பெற்­ற­னவா இல்­லையா என்­பதில் சர்­வ­தேச அர­சியல் தலை­யீடு எதுவும் இருக்­கக்­கூ­டாது என்­பது தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களின் நீண்­டநாள் கொள்­கை­யாக உள்­ளது. எனவே, இது குறித்த சர்ச்சை சர்­வ­தேச அளவில் இன்னும் விரி­வ­டையும் வாய்ப்­பி­ருக்­கிறது.

கேள்வி: உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம்களின் பாதுகாப்பில் பிரச்சினை நிலவியதே? தற்போது அதன் நிலை என்ன?

பதில்: அந்தப் பதற்றம் தற்போது ஓரளவுக்கு தணிந்திருக்கிறது. இருந்தாலும் சில அரசியல்வாதிகள் வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பொதுவெளியில் பேசிக் கொண்டிருப்பதால், அது மனங்களை வேறுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடராமலிருக்க வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04