இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்க நடவடிக்கை

Published By: Daya

03 Mar, 2020 | 12:37 PM
image

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று  காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் இந்தசெயற்பாடுகளுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இதற்காகச் சிறிது காலம் தேவை என்றும் குறித்த பகுதியை இனங்காணக் குறிப்பிடத்தக்க சில காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த அனில் ஜாசிங்க அநேகமான வெளிநாட்டவர்கள் ஒரே நேரத்தில் வருகை தந்தால் அவர்கள் அனைவரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என தெரிவித்தார்.

இதன் காரணமாக வெளிவிவகார அமைச்சின் ஊடாக தூதரகங்கள் மற்றும் நாடுகளுக்கு அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனூடாக எதிர்வரும் நாட்களில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04