கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கைஅணி வீரர்களுடன் கைகுலுக்கப்போவதில்லை என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இரண்டு டெஸ்ட் தொடரிற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னதாக ஜோ ரூட்டிடம் கொரோனா வைரஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி வீரர்களுடன் இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது எங்கள் வீரர்கள் பலர் உடல்நலப்பாதிப்பிற்குள்ளானதை கருத்தில்கொள்ளும்போது உடல்ரீதீயான தொடுகையை குறைந்தளவிற்கே வைத்துக்கொள்வதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கிருமிகள் பக்டீரியாக்கள் பரவுவதை தடுப்பதற்கான சிறப்பான ஆலோசனைகளை எங்கள் அணியின் மருத்துவ குழுவினர் எங்களிற்கு வழங்கியுள்ளனர் எனவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒருவருடன் ஒருவர் கைகுலுக்கிக்கொள்ளப்போவதில்லை,நாங்கள் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ள ஜோ ரூட் நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பிலிருக்கின்றோம் அவர்களது ஆலோசனைகளை செவிமடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் எந்த வித தடைகளுமின்றி தொடரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM