இலங்கையில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!

Published By: Vishnu

02 Mar, 2020 | 08:32 PM
image

(ஆர்.விதுஷா)

இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம்  இல்லாத போதிலும்   உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின்  அறிவுறுத்தல்களுக்கு அமைய  சுகாதார  பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, கொரோனா  வைரசின் தாக்கம்  நாட்டில் அதிகளவில்  இல்லயென்பதனால்  பாதுகாப்பு  கவசங்களை  அணிய  வேண்டிய  தேவையில்லை என  சுகாதார அமைச்சின்  தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்  தொற்று   தொடர்பிலான   சந்தேகத்தின்  பேரில்   18 பேர் இன்று நாடளாவிய ரீதியில்  உள்ள வைத்திய சாலைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள்  நான்கு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதான  சுகாதார அமைச்சின் தொற்றுநோய்  தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அங்கொடை தொற்று  நோய் வைத்தியசாலையில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள்  மூன்று  வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். 

றாகமை போதனாவைத்தியசாலையில் ஒருவரும்,  குருணாகலை  வைத்தியசாலையில் வெளிநாட்டவர் ஒருவர்  உள்ளடங்கலாக  இருவரும்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

அத்துடன், நீர்கொழும்பு போதனா வைத்திய சாலையில் மூவரும்   சிறுவர் வைத்தியசாலையில் ஒருவரும் உள்ளடங்கலாக 18  பேரே இவ்வாறு  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22