ஆப்கானிலிருந்து போதைப்பொருட்களை ஏற்றி வந்த ஈரானிய கப்பல் ஆழ் கடலில் வைத்து மடக்கிப் பிடிப்பு!

Published By: Vishnu

02 Mar, 2020 | 07:09 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சர்வதேச கடல் பரப்பு ஊடாக  இரு இலங்கை மீனவப்படுகளைப் பயன்படுத்தி சுமார் 175 கோடி ரூபா பெறுமதியுள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் எனும் (மெதம்பிடமைன்) போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படும்போது, கடற்படை மற்றும்  பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து முன்னெடுத்த விஷேட சுற்றிவளைப்பில்,  காலி, தெற்கு குடாவெல்லை கடல் பகுதியில் வைத்து  கடந்த சனிக்கிழமையன்று கைப்பற்றப்பட்டிருந்தது.  

இந் நிலையில் அவ் விரு மீனவப் படகுகளுக்கும் ஆழ் கடலில் வைத்து குறித்த போதைப் பொருட்களை பகிர்ந்தளித்திருந்த, ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களை ஏற்றி வந்திருந்த ஈரானிய கப்பல் தப்பிச் சென்று கொண்டிருந்த நிலையில், ஆழ் கடலில் வைத்து கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

அந்த கப்பலின் மேலும் போதைப் பொருள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், ஈரான் பிரஜைகள் சிலரும் அக் கப்பலில் இருந்து கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு குறித்த ஈரானிய  கப்பலை கரைக்கு இழுத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கப்பலில் இருந்து இலங்கையின் மேலும் பல பகுதிகளில், மீனவப் படகுகளுக்கு போதைப் பொருள் பகிர திட்டமிடப்பட்டிருந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவ்வாறு போதைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள தயாராக கடலுக்கு சென்ற கல்பிட்டி பகுதி மீனவப் படகொன்று தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விவகாரத்தில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள,7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்ப்ட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34