1000 ரூபா சம்­பள உயர்­வுக்­கான ஒப்­பந்தத் திகதியை அறிவித்தார் அமைச்சர்..!

Published By: J.G.Stephan

02 Mar, 2020 | 12:39 PM
image

'ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வுக்­கான ஒப்­பந்தம் இன்னும் ஓரிரு நாட்­களில் கைச்­சாத்­தி­டப்­படும். அதன்­பின்னர் மார்ச் முதலாம் திகதி முதல் சம்­பளம் கணிக்­கப்­பட்டு அந்த தொகை ஏப்ரல் 10 ஆம் திகதி தொழி­லா­ளர்­களின் கைக­ளுக்கு நிச்­சயம் கிடைக்கும். எனவே, இது விட­யத்தில் எவரும் அச்சம் கொள்ள வேண்­டி­ய­தில்லை' -என்று சமூக வலு­வூட்டல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான அமைச்­ச­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார். 

கொட்­ட­கலை தொண்­டமான் புரத்தில் 30 குடும்­பங்­க­ளுக்­கான தனி­வீட்டுத் திட்டம் 1999 இல் ஆரம்­பிக்­கப்­பட்டு, 2001 இல் பய­னா­ளி­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அக்­கு­டும்­பங்­க­ளுக்­கான காணி உறு­திப்­பத்­தி­ரங்­களை வழங்கும் நிகழ்வு நேற்று   கொட்­ட­கலை ஹில்கூல் விருந்­த­கத்தில் நடை­பெற்­றது.

பெருந்­தோட்ட மனி­த­வள அபி­வி­ருத்தி நிதி­யத்தின் ஏற்­பாட்டில், காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழுவின் பங்­க­ளிப்­புடன் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான் மேலும் கூறி­ய­தா­வது,

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மார்ச் முதலாம்  திகதி முதல் நாட் சம்­ப­ள­மாக ஆயிரம் ரூபா கிடைக்கும் என அன்று அறி­வித்­தி­ருந்தேன். இன்றும் அத­னையே தெளி­வா­கவே கூறு­கின்றேன். வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழியின் பிர­காரம் நிச்­சயம் இன்று (01) முதல் ஆயிரம் ரூபா கிடைக்கும்.

சம்­பள உயர்­வுக்­கான ஒப்­பந்­தத்தில் சில சரத்­து­களில் சிக்கல் இருப்­பதால் - அவற்றை திருத்­து­மாறு கோரி­யி­ருந்தோம். அதன் அடிப்­ப­டையில் இன்னும் ஓரிரு நாட்­களில் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும்.

குறிப்­பாக ஒப்­பந்தம் எப்­போது கைச்­சாத்­தி­டப்­பட்­டாலும், மார்ச் முதலாம் திகதி முதலே சம்­பளம் கணிக்­கப்­படும் என்­பதை உறு­தி­யாகக் கூறிக்­கொள்­கின்றேன். இன்று முதல் 31ஆம் திக­தி­வரை தொழி­லா­ளர்கள், வேலைக்கு சென்றால் - வேலை செய்த நாட்­களின் பிர­காரம் ஏப்ரல் 10 ஆம் திகதி முழு­மை­யான சம்­பளம் கைக­ளுக்கு கிடைக்கும்.

அத்­துடன், பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்ட பின்னர், ஆயிரம் ரூபா வழங்­கப்­ப­டாது, அதற்கு பொறுப்­புக்­கூற யாரும் இல்லை என்­றெல்லாம் சிலர் கருத்­து­களை முன்­வைக்­கின்­றனர். ஆனால், பாரா­ளு­மன்றம்  கோத்தபாய ராஜ­பக் ஷ சிறந்த நிர்­வாகி என்­பதால் ஆயிரம் ரூபாவை எப்­படி வாங்­கு­தென்றும், வழங்­கு­வ­தென்றும் அவ­ருக்கு நன்கு தெரியும். நானும் முன்­வைத்த காலை பின்­வைக்க மாட்டேன். எனவே, ஆயிரம் ரூபா நிச்­சயம் கிடைக்கும்.

 அதே­வேளை, கடந்­த ­கா­லங்­களில் காணி உறு­திப்­பத்­திரம் என்ற போர்­வையில் அட்டை­யொன்று வழங்­கப்­பட்­டது. அதனை கிராம சேவ­க­ரிடம் எடுத்­துச் சென்­றால்­கூட எடு­ப­டாது. ஆனால், இன்று வழங்­கப்­ப­டு­வது காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழு­விடம் இருந்து நேர­டி­யாக கிடைக்­கின்­றது. இது சட்­ட­பூர்­வ­மா­னது. இன்று ஒரு தொகு­தி­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது. ஏனை­யோ­ருக்கு விரைவில் பெற்­றுக்­கொ­டுப்போம் என்                                                     றார்.

 இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் நிதிச்­செ­ய­லாளர் மருதபாண்டி ரமேஷ், இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் உட்பட மேலும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58