நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பல்கலை மாணவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

Published By: Vishnu

02 Mar, 2020 | 11:59 AM
image

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில கைக்கப்பட்டுள்ள இரு பிக்குகள் உட்பட 22 பல்கலைக்கழக மாணவர்களுக்குமான விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களை இன்று காலை கொழும்பு நீதிவான நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கறுவாதோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர்கல்வி அமைச்சுக்கு முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால்  சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இந்த போராட்டம் கடந்த வியாழக்கிழமையே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன்போது மாணவர்கள் உயர்கல்வி அமைச்சுக்கு முன்னிலையில் உள்ள பிரதான வீதி , பாதக்கடவை மற்றும் அமைச்சுக்குள் செல்வதற்கான பிரதான வழியையும் மறைக்கும் வகையில் முகாம் அமைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் குறித்த பகுதியில் வாகன நெறிசல்களும் ஏற்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய கறுவாத்தோட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட மாவர்களை கைது செய்துள்ளனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தமை , பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் இந்த செயற்பாடுகளுக்கு  உதவி ஒத்தாசைகளை வழங்கிமை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52