நீங்கள் முன்னுதாரணமாக நடந்து கொள்ளவேண்டாமா? கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சீறிப்பாய்ந்தார் விராட்

02 Mar, 2020 | 11:41 AM
image

நீங்கள் இந்திய அணியின் தலைவர் என்ற வகையில் முன்னுதாரணமாக நடந்துகொள்ளவேண்டும்  என கருதுகின்றீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவேளை விராட்கோலி அந்த செய்தியாளரிடம் சீறிப்பாய்ந்த சம்பவம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட விராட்கோலி மீண்டும் சீற்றமடைந்துள்ளார்.

நேற்றைய தினம் கேன் வில்லியம்சன் , லதாம் ஆட்டமிழந்த வேளை விராட்கோலி நடந்துகொண்ட விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையிலேயே அவரை நோக்கி இந்த கேள்வியை பத்திரிகையாளர் கேட்டுள்ளார்.

இந்த கேள்வியினால் சீற்றமடைந்த விராட்கோலி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் எனக்கு பதிலை சொல்லுங்கள் என பத்திரிகையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டு உரிய கேள்வியை முன்வைக்கவேண்டும் என விராட் தெரிவித்துள்ளார்.

நான் மூன்றாவது நடுவருடன் பேசியுள்ளேன், அவரிற்கு தெளிவுபடுத்தியுள்ளேன் நீங்கள் இங்கு அரை குறை அறிவுடன் வரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் - நீங்கள் மைதானத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்- வில்லியம்சனை நோக்கி சைகை செய்தது, இரசிகர்களை நோக்கி சைகை செய்தது, இந்திய அணித்தலைவர் என்ற முறையில் நீங்கள் முன்னுதாரணமாக  நடந்து கொள்ளவேண்டாமா ?

விராட்கோலி- நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்

பத்திரிகையாளர்-நான்தான் உங்களை கேள்வி கேட்டேன்

விராட்- நான் உங்களை கேள்வி கேட்கின்றேன்

பத்திரிகையாளர் - நீங்கள் முன்னுதாரணமாக நடந்துகொள்ளவேண்டும்

விராட்கோலி-

என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டு உரிய கேள்வியை முன்வைக்கவேண்டும் 

நான் மூன்றாவது நடுவருடன் பேசியுள்ளேன், அவருக்கு நேற்று இடம்பெற்ற விடயங்கள் குறித்து பிரச்சினை எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நீங்கள் இங்கு விடயங்களை அரைகுறையாக அறிந்துகொண்டு கேள்விகளை முன்வைக்க முடியாது.

நீங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்த முயன்றால் இது அதற்கான இடமல்ல

 இதேவேளை இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ள  விராட்கோலி இந்திய பந்து வீச்சாளர்கள் அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திய பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் அணியை கைவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் நியுசிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களை திணறடிப்பதற்கு அவசியமான ஓட்டங்களை துடுப்பாட்ட வீரர்கள் பெறவில்லை என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20