நியூஸிலாந்திடம் தோற்றுப்போன கோலிப் படை ; டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது இந்தியா!

Published By: Vishnu

02 Mar, 2020 | 11:02 AM
image

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இலகுவாக வீழ்த்திய, நியூசிலாந்து அணி, தொடரையும் 0-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 242 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி  73.1 ஓவர்களில் 235 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனால் 7 ஓட்ட முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் 3 ஓட்டங்களிலும், பிரித்வி ஷா 14 ஓட்டங்களிலும் வெளியேறினர்.  

அடுத்தபடியாக அணித் தலைவர் விராட் கோலி 14 ஓட்டங்களில்‍ ஆட்டமிழந்தார். ரகானே 9 ஓட்டங்களுடனும், புஜாரா 24 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன் பின்னர் வந்த பின்னணி துடுப்பாட்ட வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி 46 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 132 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  

இதையடுத்து, துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. 

இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இழந்தது.

ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : ‍ICC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37