ஜனா­தி­பதி தனக்­குள்ள அதி­கா­ரங்­க­ளின்­படி பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்பார்: சி.பி. ரத்­நா­யக

Published By: J.G.Stephan

02 Mar, 2020 | 10:30 AM
image

(எம்.மனோ­சித்ரா, இரா­ஜ­துறை ஹஷான்)

அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­ப­திக்கு காணப்­படும் அதி­கா­ரங்­களின் படி இன்று திங்­கட்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் சி.பி. ரத்­நா­யக தெரி­வித்தார். பாரா­ளு­மன்றம் கலைப்பு தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வினால் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. 

பாரா­ளு­மன்றம் இன்று கலைக்­கப்­பட் டால் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் இறு­திப்­ப­கு­தியில் பொதுத் தேர்தல் நடத்­தப்­படும் என்று ஆளுந்­த­ரப்­பினர் தெரி­வித்­துள்­ளனர்.

எவ்­வா­றி­ருப்­பினும் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு 60 நாட்கள் கால அவ­காசம் தேவைப்­படும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார். 

அத்­தோடு 10–-15க்கு இடைப்­பட்ட கட்­சிகள் தேர்­தலில் போட்­டி­யி­டு­மானால் சுமார் 500 மில்­லியன் செல­வாகும் என்றும் போட்­டி­யிடும் கட்­சி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கு­மானால் தேர்தல் செல­வு­களும் அதி­க­ரிக்கும் என்றும் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இன்­றைய  தினம் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் பட்­சத்தில் மே முதல் வாரத்தில் தேர்­தலை நடத்தக் கூடி­ய­தாக இருக்கும் என்றும் எனினும் மே மாதம் முதலாம் திகதி தொழி­லாளர் தினம் கொண்­டா­டப்­படும் என்­பதால் அன்­றைய தினம் தேர்தல் நடத்­தப்­பட மாட்­டாது என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றி­ருப்­பினும் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­தற்­கான உத்தியோகபூர்வ வர்த்தமானி வெளியானதன் பின்னரே வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கான தினம் என்பன உறுதியாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41