கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையில் அறிமுகமாகியிருக்கும் நவீன தொழில்நுட்பம்

Published By: Digital Desk 3

01 Mar, 2020 | 04:23 PM
image

கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையின் போது ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு பாதிப்பு நிறைந்த கல்லீரல்களையும் பயன்படுத்துவதற்குரிய நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகியிருக்கிறது.

இதுதொடர்பாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர் இளங்கோ பேசுகையில்,“ உடலுறுப்பு மாற்று சத்திர சிகிச்சையை பொருத்தவரை சிறுநீரகம், விழித்திரை ஆகிய உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைக்குப் பின்னர், கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சைகள் தான் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சைகளுக்கு தகுதியான நன்கொடையாளர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. அதிலும் கொடையாக பெறப்பட்ட கல்லீரல் ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு பாதிப்பு நிறைந்ததாக இருந்தால், அதனை உறுப்பு மாற்று சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்த இயலாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் 30% வரை கொழுப்பு பாதிப்புள்ள கல்லீரல்களையும் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகியிருக்கிறது.

மனித உடலிலிருந்து சிறுநீரகங்களையும், கல்லீரலையும் வெளியே எடுத்த பிறகு, மிக குறிப்பிட்ட கால அவகாசம் வரை தான் அவற்றை உயிர்ப்புடன் பாதுகாக்க இயலும். அதிலும் கல்லீரலை பொருத்தவரை கொழுப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் கல்லீரலை பாதுகாப்பது சவாலானதாகவும், அதனை பொருத்தமுடியாத நிலையும் இருந்தது. இந்த நிலையில் ஹைபோதேர்மிக் ஒட்சினேற்ற  பெர்ஃப்யூசன்  ( Hypothermic Oxygenated Liver Perfussion) எனப்படும் நவீன தொழில்நுட்பமும். அதற்குரிய நவீன கருவியும் அறிமுகமாகியிருக்கிறது/ இதன் மூலம் நன்கொடையாக பெறப்படும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல்களை 96 சதவீதம் வரை துல்லியமாக பாதுகாத்து. வெற்றிகரமாக பயனாளிகளுக்கு பொருத்த முடியும்.” என்றார்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04