கொரோனாவின் பரவலால் சீனாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பாரியளவு குறைவு!

Published By: Vishnu

01 Mar, 2020 | 11:06 AM
image

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட விளைவுகளினால் சீனாவின் பிரதான நிலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுப்பாடானது பாரியளவு குறைந்துள்ளதாக நாசா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராச்சி நிலையங்கள் வெளியிட்டுள்ள செய்மதி படத்தில் சுட்க்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தி பணிகளை இடை நிறுத்தின.

அது மாத்திரமல்லாமல் பல நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்மையினால் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாரியளவு மட்டுப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் ஜனவரி 1- 20 ஆம் திகதிகள் வரை எடுத்த சீனாவின் செய்மதிப் படத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு உயர்வாக காணப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி 10-25 ஆம் திகதி வரை எடுக்கப்பட்ட செய்மதி படத்தில் சுற்றுச்சூழல் மாசுப்பாடு பாரியளவில் குறைவடைந்துள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தின் காற்றின் தர ஆராய்ச்சியாளரான ஃபீ லியு கூறுகையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்காக இவ்வளவு பரந்த பகுதியில் இதுபோன்ற வியத்தகு சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவினை நான் கண்டது இதுவே முதல் முறை ஆகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07