வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவைச்சேர்ந்த ஐவர் கைது : பலர் மறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

01 Mar, 2020 | 07:44 AM
image

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

“சந்தேகநபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர் வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“அச்சுவேலியில் கொள்ளைக் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எஸ். சேனாதீரவின் உத்தரவில் சிறப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முடுக்கிவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய தேடுதல் மற்றும் விசாரணையில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பல் சாவகச்சேரி, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டுள்ளது. மேலும் பெண்கள் உள்ள வீடுகளில் பாலியல் துன்புறுத்தல்களையும் இந்தக் கும்பல் செய்துள்ளது.

கொள்ளையிட்ட 37 லட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளை நெல்லியடியிலுள்ள நகைக் கடையில் விற்பனை செய்துள்ளனர். கொள்ளையிட்ட நகை எனத் தெரிந்தும் அவற்றை வாங்கிய நகைக் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவர். ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலிப் பகுதிகளைச் சேர்ந்தோர்.

இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3-4 பேர் உள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று இரவு முற்படுத்தப்படவுள்ளனர். அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41