தொடர்ச்சியாக 13 தோல்விகளுடன் பெண்கள் டி 20 யிலிருந்து இலங்கை அணி வெளியேறியது!

29 Feb, 2020 | 04:52 PM
image

பெண்களுக்கான டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுதிரேலியாவில் நடைபெற்று  வரும் நிலையில், குழு 'A' யில் இந்திய அணியுடன் கலமிறங்கிய  இலங்கை மகளிர் அணியை, 33 பந்துகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. 

 இப்போட்டியில் இலங்கை அணியின் கெப்டன் சாமரி 33 ஓட்டங்களை குவித்தார். தில்ஹரி ஆட்டமிழக்காமல்  25 ஓட்டங்களை பெற்றார். இதே வேளை இந்திய அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து 114 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி, 32 பந்துகள் மீதமிருந்த நிலையில், 116 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. 

23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராதா யாதவ், ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

இலங்கையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பெண்கள் டி 20 உலகக் கிண்ண போட்டிகளில் குழு 'A' யில் முதலிடம் வகிக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

இதனையடுத்து இலங்கை மகளிர் அணி  டி 20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது. டி 20 போட்டிகளில் இலங்கை பெண்கள் அணிக்கு தொடர்ச்சியாக  இது 13 வது தோல்வியாகும், இலங்கை கடைசியாக 2018 ஆம் ஆண்டில் டி 20 போட்டியில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35