சட்டவிரோத மீன் பிடி வலைகளுடன் மூவர் கைது!

29 Feb, 2020 | 02:47 PM
image

மன்னார் - வங்காள கடல் பிராந்தியத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன் பிடி வலைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்நிலையில் வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மன்னார் வங்காள கடற்கரையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது 5 தடை செய்யப்பட்ட வலைகளுடன் 3 பேரை கைது செய்தனர்.

அத்தோடு ஒரு டிங்கி படகு மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படை கைப்பற்றியதுடன், கைது செய்யப்பட்ட நபர்கள் 35, 38 மற்றும் 57 வயதுடைய அப்பகுதியில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

அதேவேளை குறித்த நபர்கள், டிங்கி படகு மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image Help : Navy News

முக்கிய செய்திகள்

icon-left
icon-right