மீண்டும் சொதப்பினார் கோலி- டிஆர்எஸ் முறையை பயன்படுத்திய விதத்திற்காக ரசிகர்கள் பாய்ச்சல்

29 Feb, 2020 | 12:29 PM
image

நியுசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இனிங்சிலும் இந்திய அணியின் தலைவர் விராட்கோலி சொற்ப ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களிற்கு ஏமாற்றமளித்துள்ள அதேவேளை அவர் டிஆர்எஸ் முறையை பயன்படுத்திய விதமும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கிறைஸ்சேர்சில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இனிங்சில் 242 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணியின் தலைவர் விராட்கோலியிடமிருந்து சிறப்பான இனிங்ஸ் ஒன்றை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் மீண்டும் சொற்ப ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்துள்ளார். விராட்கோலி 3 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில்  டிம் சௌத்தியின் பந்திற்கு ஆட்டமிழந்தார்.

இதேவேளை இந்திய அணியிடம் எஞ்சியிருந்த ஒரேயொரு ரிவியுவை விராட்கோலி பயன்படுத்திய விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

விராட்கோலி2016 ற்கு பின்னர்  இதுவரை  14 தடவைகள்  நடுவரின் தீர்ப்பை மறு ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்,இதில் 2017 -18 இல் இலங்கைக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் அவரது ரிவியு மாத்திரம் சரியானதாக அமைந்துள்ளது என ரசிகர் ஒருவர் பதிவு செய்துள்ளார்

விராட்கோலி குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றமை இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடியை உண்டுபண்ணியுள்ளது,எனமற்றுமொரு ரசிகர் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு ஆனால் விராட்கோலி மீண்டுமொரு முறை அணியை விட தனக்கு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார் என மற்றுமொரு ரசிகர் பதிவு செய்துள்ளார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு எதிராக எல்பிடபில்யூ வழங்கப்பட்டால் ஒவ்வொரு முறையும் விராட்கோலி  தான் ஆட்டமிழக்கவில்லை என கருதுகின்றார் என்ற கருத்தை பதிவு செய்துள்ள ரசிகர் ஒருவர் நீங்கள் அணித்தலைவர் என்பதற்காக டிஆர்எஸ்சினை பயன்படுத்தவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விராட்கோலி தலைமைப்பதவியை தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றார் சுயநலத்துடன் செயற்படுகின்றார் எனவும் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35