சர்­வ­தே­சத்தின் கவலை...

Published By: J.G.Stephan

29 Feb, 2020 | 10:42 AM
image

யுத்­த­கா­லத்தின்போது  இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும்  சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­பன தொடர்­பாக கடந்த காலங்­களில் விசா­ரித்து ஆராய்ந்த  ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­களை ஆராய்­வ­தற்­காக  உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஒரு­வரின் தலை­மையில் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்று நிறு­வப்­படும் என  இலங்கை  அர­சாங்கம்  முன்­வைத்த யோச­னையை ஐக்­கி­ய நா­டுகள் மனித  உரிமைகள் பேரவை முழு­மை­யாக நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது. 

நேற்று முன்­தினம்  ஐக்­கிய நாடுகள் மனித  உரிமைகள் பேர­வையில்  நடை­பெற்ற   இலங்கை தொடர்­பான  விவா­தத்­தின்­போது  உரை­யாற்­றிய மனித உரிமை ஆணை­யாளர்  மிச்செல் பச்லெட் இலங்­கை­யா­னது  புதிய ஆணைக்­கு­ழு­வொன்றை  நிய­மிக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­துள்ளபோதிலும்  அதில் நம்­பிக்கைகொள்ள  முடி­யா­த­ நி­லைமை காணப்­ப­டு­வ­தாக   சுட்­டி­யி­ருந்தார். 

இலங்கை அர­சாங்கம்  நல்­லி­ணக்கம் மற்றும்  பொறுப்­புக்­கூறல்   மனித உரிமை விவ­கா­ரத்தில் ஏற்­க­னவே வழங்­கிய   வாக்­கு­று­தி­க­ளுக்கு  பதி­லாக  மாற்று  அணு­கு­முறை ஒன்றை  அறி­வித்­துள்­ளமை தொடர்பில் நான் கவ­லை­ய­டை­கின்றேன்.  இலங்கை அர­சாங்­க­மா­னது அனைத்து  மக்­க­ளி­னதும்  தேவை­களை  கருத்தில் கொண்டு செயற்­ப­ட­வேண்டும். முக்­கி­ய­மாக சிறு­பான்மை மக்­களின் தேவைகள் குறித்து   செயற்­ப­ட­வேண்டும்.   கடந்த சில வரு­டங்­க­ளாக உரு­வாக்­கிய திட்­டங்­களை   தொட­ரு­மாறும் பாது­காக்­கு­மாறும்  நான்  இலங்கை அர­சாங்­கத்­திடம்   வலி­யு­றுத்­து­கிறேன்  என்று  ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் பச்லெட்  குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

அதே­போன்று காணா­மல்­போனோர் அலு­வ­லகம்  மற்றும் இழப்­பீடு வழங்கும் அலு­வ­லகம் என்­ப­ன­வற்­றுக்கு அர­சியல் மற்றும்  வள­ரீ­தி­யான ஒத்­துழைப்பு வழங்­கு­மாறு அர­சாங்­கத்தை  வலி­யு­றுத்­து­கிறேன்.  காணா­மல்­போ­னோரின் குடும்­பங்­க­ளுக்கு நீதியைப் பெறு­வ­தற்கும்   நிவா­ர­ணத்தைப் பெறு­வ­தற்கும் உரிமை இருக்­கி­றது. தமிழ், மற்றும்  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான  வைராக்­கிய பேச்­சுக்கள்   அதி­க­ரித்து செல்­வதை காண்­கின்றோம். கடந்த கால மனித  உரிமை மீறல்­க­ளுக்­காக தண்­டனை வழங்­கப்­ப­டாத கலா­சாரம் தொடர்­கின்­றமை   மிக அடிப்­படை பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது என்றும்  மிச்செல் பச்ெலட் பேர­வையில் எடுத்­து­ரைத்தார்.  அத்­துடன் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் உள்­ள­க­ரீ­தி­யான செயற்­பா­டுகள் தொடர்ந்தும் தோல்வி அடைந்­தி­ருக்­கின்­றன.  மற்­று­மொரு விசா­ரணை ஆணைக்­குழு   நிய­மிக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில் நான்  இணங்­க­வில்லை.  பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும்  நீதி மறுக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்கள். அது­மட்­டு­மன்றி  கடந்த கால மீறல்கள் மீண்டும்  நடை­பெ­றாது என்­ப­தற்கு எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை.  எனவே  ஐ.நா. மனித உரிமைகள் பேர­வை­யா­னது இலங்கை விட­யத்தில்  தொடர்ந்தும் அவ­தா­னத்­து­ட­னேய  இருக்­க­வேண்டும் என்றும்  ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர்  மிச்செல் பச்ெலட்  குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

அதன்­படி  இந்த விவா­தத்தில்   முதலில்  மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்ெலட் இலங்கை தொடர்­பா­ன­ வி­ட­யத்தை   முன்­வைத்து உரை­யாற்­றி­ய­போதே  இந்த விட­யங்களை கூறினார்.  தொடர்ந்து உரை­யாற்­றிய  வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன  இலங்­கை­யா­னது  சமா­தா­னத்­தையும்   நல்­லி­ணக்­கத்­தையும் அடை­வ­தற்­கான சர்­வ­தேச சமூ­கத்­துடன்   இணைந்து பய­ணிக்கும் என்றும்,  அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கின்­றோமே தவிர   பேர­வையில் இருந்து வில­க­வில்லை என்ற கருத்துப்பட கூறினார்.

எப்­ப­டி­யி­ருப்­பினும் இலங்­கையின்   உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர்   ஒருவர் தலை­மையில்    விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்றை  நிய­மித்து விட­யங்­களை ஆராய்­வ­தற்­கான   மாற்று யோசனை     ஐ.நா. மனித உரிமைகள் பேர­வை­யினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மேலும்  இந்த விவா­தத்தில் பங்­கேற்று உரை­யாற்­றிய  ஐக்­கி­ய­ நா­டுகள் மனித  உரிமை கள் பேர­வையின் உறுப்பு நாடு­களும்  இலங்­கையின் வெளி­யேற்றம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை   வெளி­யிட்­டுள்­ள­துடன் பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென  வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. 

இவ்­வா­றான பின்­ன­ணியில்  அர­சாங்­க­மா­னது தற்­போது   அடுத்த கட்­ட­மாக   என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பது  ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. அதா­வது,  இலங்­கையில்  பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும்   ஊக்­கு­விக்­க­வேண்­டு­மென்ற   நோக்­கத்­திற்கு அமைய   2015ஆம் ஆண்டு  இலங்­கையின் அப்­போ­தைய அர­சாங்­கத்தின்  அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட  30/1   பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கின்ற  இலங்­கையின் புதிய அர­சாங்­க­மா­னது   பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுப்­ப­தற்­கான மாற்று யோச­னை­யா­கவே  இந்த  உள்­ளக  விசா­ரணை ஆணைக்­கு­ழுவை முன்­வைத்­தி­ருந்­தது.  எனினும்  அதனை தற்­போது   ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமைகள் பேரவை நிரா­க­ரித்­தி­ருப்­பதன் கார­ண­மாக  அடுத்து அர­சாங்கம் என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பதே மிக முக்­கி­ய­மான கேள்­வி­யாக அமைந்­தி­ருக்­கின்­றது. 

 அதா­வது,  இலங்­கை­யா­னது  பொறுப்­புக்­கூறல் விட­யத்தில்  உள்­ளக ரீதியில் நட­வ­டிக்­கை­களை எடுக்கும். இந்த விட­யத்தில் ஐ.நா.வுடன் இணைந்து பய­ணிக்கும் என்றும் அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன அறி­வித்­தி­ருந்தார். எனினும்  கடந்த காலங்­களில்   உள்ளக விசா­ரணை செயற்­பா­டுகள்   தோல்­வி­ய­டைந்­தி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள  மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்ெலட் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே   அர­சாங்­கத்தின் மாற்று யோச­னையை   நிரா­க­ரித்­துள்­ள­துடன்  அதில் நம்­பிக்கை வைக்க முடி­யாது எனவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

யுத்­தத்­தினால் பாதிப்­புக்­களை எதிர்­கொண்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரை­யிலும் அவர்­களும் உள்­ளகப் பொறி­மு­றையில் நம்­பிக்­கை­யில்லை என்றும்  சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு அவ­சியம் எனவும் கூறி­வ­ரு­கின்­றனர்.  காரணம் யுத்தம் 2009ஆம்  ஆண்டு  முடி­வுக்கு வந்த நிலையில்  கடந்த 11 வரு­டங்­க­ளா­கவே  பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்­தி­ய­டை­யக்­கூ­டி­ய­வ­கை­யி­லான எந்த நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.   கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான  ஆணைக்­குழு  நிய­மிக்­கப்­பட்டு உள்­ளக ரீதியில் விட­யங்கள் ஆராய்ப்­பட்­ட­போ­திலும்   இறு­தியில் அந்த ஆணைக்­குழு  வெளி­யிட்ட அறிக்­கையின்  பரிந்­து­ரைகள்    அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதே­போன்று காணா­மல்­போனோர் குறித்து ஆராய  ஓய்­வு­பெற்ற மேல் நீதி­மன்ற நீதி­பதி    மெக்ஸ்வல் பர­ண­கம தலை­மையில்   ஜனா­தி­பதி  ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஊடா­கவும்  காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை.  இவ்­வாறு உள்­ளக ரீதியில்   முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டுகள் ஊடாக   பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு கடந்த காலங்­களில் நீதி கிடைக்­காததன் கார­ண­மா­கவே அந்த மக்­களும்   சர்­வ­தே­சத்தின்  பங்­க­ளிப்பு அவ­சியம் என்ற கோரிக்­கையை முன்­வைக்க  ஆரம்­பித்­தனர். 

கடந்­த­கா­லங்கள் முழு­வதும்  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளினால்  நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது சர்­வ­தேச விசா­ர­ணையே அவ­சியம் என்ற விடயம்  தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. இந்த நிலை­யி­லேயே தற்­போது  அர­சாங்கம் முன்­வைத்த   மாற்று யோச­னையை  ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமைகள் பேரவை  சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.  

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் இந்த நாட்டின் பிர­ஜைகள் என்­பதை  உணர்ந்து அவர்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.    உள்­நாட்டில் உரிய முறையில்  நீதி நிலை­நாட்­டப்­ப­டாததன் கார­ண­மா­கவே   சர்­வ­தேச ரீதி­யி­லான கோரிக்­கை­கள் எழுந்­தன என்­பதை   அர­சாங்கம்  புரிந்­து­கொள்­ள­வேண்டும்.  பாதிக்­கப்­பட்ட மக்கள் யாருக்கும்   தண்ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று கூற­வில்லை. யாரையும் தண்­டிக்­க­வேண்டும் என்­பது பாதிக்­கப்­பட்ட மக்­களின் நோக்­க­மாக  இல்லை. மாறாக, தமக்கு நடந்த அநீ­திக்கு நீதியை கோரு­கின்­றனர். தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற   உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மாறே பாதிக்­கப்­பட்ட மக்கள் கூறு­கின்­றனர்.  எனவே அந்த மக்­களின் நியா­ய­மான கோரிக்கை  கவ­னத்­தில்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.  அர­சாங்கம்  30/1 என்ற    பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யுள்ள நிலையில் எவ்­வாறு  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்கும் என்று சர்­வ­தேசம் கேள்வி எழுப்­பு­கின்­றது.  பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்கு  நீதியே தேவைப்­ப­டு­கி­றது.  உண்­மையை அறி­வ­தற்கு அந்த மக்கள் உரித்­து­டை­ய­வர்கள்.

அதனால் அர­சாங்கம் இந்த விடயம் தொடர்பில்  சிந்­தித்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகளை எடுக்­க­வேண்டும்  குறிப்­பாக   பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்­தி­ய­டை­கின்ற வகை­யி­லான ஒரு பொறி­முறை அவ­சி­ய­மாகும்.  அந்த  நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்­தி­ய­டை­யாது என்ற பொறி­முறை ஊடா­கவும்  நீதியை நிலை­நாட்ட முடி­யுமா- என்பது கேள்விக்குறியாகும். அந்த மக்களின்  உணர்வுகளைப்  புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

(29.02.2020 வீரகேசரி நாளிதழின்  ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13