வரு­மா­னமின்றி அரச ஊழி­யர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற முடி­யாது: ஜனா­தி­பதியின் அதிரடி முடிவு

Published By: J.G.Stephan

29 Feb, 2020 | 10:31 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

அரச வரு­மா­னத்தை ஈட்டிக்கொள்­ளாமல் அரச ஊழி­யர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற முடி­யாது. அரச அதி­கா­ரி­களை நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் நோக்கம் கிடை­யாது. மக்­க­ளுக்­காக முன்­னெ­டுக்கும் சேவையில் ஊழி­யர்கள் அனை­வரும் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும் என ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

அரச நிறு­வ­னங்கள், மாகாண சபை  மற்றும் உள்­ளூராட்சி மன்ற நிறு­வ­னங்­களில்  வினைத்­தி­ற­னான செயற்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று  பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் இடம் பெற்­றது.இந்­நி­கழ்வில் கலந்துகொண்டு உரையாற்று­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

1972ஆம் ஆண்­டுக்கு  முற்­பட்ட  காலத்தில்   அரச நிதி கணக்­காய்வு குழு­விற்கு பொறுப்­பாக்­கப்­பட்­டி­ருந்­தது. 1978ஆம் ஆண்­டுக்கு பிறகு நிதி தொடர்­பான அனைத்து அதி­கா­ரங்­களும் பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­பாக்­கப்­பட்­டுள்­ளன. சட்­டத்­துறை, நிர்­வா­கத்­துறை மற்றும் நீதித்­துறை ஆகிய  முத்­து­றை­களின் பிர­தான நோக்கம் மக்­க­ளுக்­கான சேவை  வழங்­கு­த­லி­லேயே  தங்­கி­யுள்­ளது. அரச   நிறு­வ­னங்­களை  நவீ­ன­ம­யப்­ப­டுத்த  வேண்டும். என்ற  கோரிக்கை தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இருக்கும் வளங்­களை  பய­னு­டை­ய­தாகக் கொண்டு செயற்­பட்டால் பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப்  பெற்றுக் கொள்­ளலாம்.  அரச சேவை­யினை  மக்கள் பெற்றுக் கொள்ளும்போது பல சந்­தர்ப்­பங்­களில் அதி­ருப்­தி­ய­டை­கின்­றார்கள். இதற்கு பிர­தான காரணம் சேவை­யினை பெற்றுக்கொள்­வதில் ஏற்­படும்.

வினைத்­தி­ற­னா­கவும்  விரை­வா­கவும் சேவை­களை முன்­னெ­டுக்க    அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்ளேன். குறு­கிய  காலத்தில்  அரச சேவை­யினை  முழு­மை­யாக  நவீன முறைப்­ப­டுத்த  உரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. தேசிய  கொள்­கை­யினை வகுத்து அவற்றை  முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு  நேரம் ஒதுக்­கு­வதை காட்­டிலும்,  ஜனா­தி­பதி  செய­ல­கத்தின்  முன்­பாக  இடம்பெறும் போராட்­டங்­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு அதிக நேரம் செல­வி­டப்­ப­டு­கின்­றது.  ஆகவே போராட்­டங்­களை  மேற்­கொள்­ப­வர்­க­ளுடன் தொடர்­பு­டைய அமைச்­சுக்களினூடாக தீர்வை  வழங்­கு­மாறு  குறிப்­பிட்­டுள்ளேன். 

அரச ஊழி­யர்கள் பல­த­ரப்­பட்ட விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கோரிக்கை விடுத்­துள்­ளார்கள். அரச வரு­மா­னத்தை ஈட்டிக் கொள்­ளாமல்  எவ்­வாறு கோரிக்­கை­களை நிறை­வேற்ற முடியும். அரச அதி­கா­ரிகள் முதலில் மக்­க­ளுக்கு பய­னு­டை­ய­தான சேவை­யாற்ற வேண்டும். அர­சி­ய­லமைப்பு பேரவை  உள்­ளிட்ட பல தாப­னங்கள் சுயா­தீ­ன­மாக செயற்­படும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சுயாதீனமான நிறுவனங்களில் தனிப்பட்ட உரிமை என்பதை  குறிப்பிட்டுக் கொண்டு ஒருவர் நிறுவன  சுயாதீனங்களுக்கு முரணாக செயற்பட முடியாது. 

மக்களுக்கான  சிறந்த சேவையினை   அரச ஊழியர்கள் முன்னெடுக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19