அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை

Published By: Vishnu

28 Feb, 2020 | 05:16 PM
image

(எம்.மனோசித்ரா)

நீண்டகாலமாகக் காணப்படும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தொழில் துறையினரின் சம்பளம் மற்றும் சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இலங்கை ஆசிரியர் சேவைக்கான அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து சம்பள மற்றும் சேவை யாப்பை வகுத்து பொருத்தமான சம்பள முறை ஒன்றை வகுப்பது அத்தியாவசியம் என்பது சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக செயற்படும் பொருட்டு தற்பொழுது அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், தற்போழுது ஆசிரியர் அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு விரிவான வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில்  சம்பளம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு நிலவும் முரண்பாடுகளை நீக்ககூடிய வகையில் புதிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக  ஜனாதிபதியால் சமீபத்தில் தேசிய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு அமைவாக இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசின் மூலம் ஆசிரியர் - அதிபர் சேவையில் தற்பொழுது நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22