ஜெனிவா யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம்

Published By: Digital Desk 3

28 Feb, 2020 | 03:14 PM
image

(ஜெனிவாவிலிருந்து ஸ்ரீகஜன் )

இலங்கை தொடர்­பான 30/1 பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து   வில­கப்­போ­கிறோம் என்று கூறிக்­கொண்­டி­ருந்த அர­சாங்கம்  தற்­போது அதி­லி­ருந்து  முழு­மை­யாக  வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.  43ஆவது ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக  ஜெனிவாவுக்கு வருகை தந்­துள்ள   வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன  கடந்த புதன்­கி­ழமை பேர­வையில் ஆற்­றிய விசேட உரையில்  இந்த விட­யத்தை    அவர்  பகி­ரங்­க­மாக   அறி­வித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு  முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் கையொப்­பத்­துடன் 30/1 பிரே­ர­ணைக்கு  இலங்­கை­யினால் வழங்­கப்­பட்ட   இணை அனு­ச­ரணை  இதன்­மூலம்   ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின்  தலை­மை­யி­லான  புதிய அர­சாங்­கத்­தினால் மீளப்­பெ­றப்­பட்­டுள்­ளது.
புதன்­கி­ழமை நடை­பெற்ற 43ஆவது   கூட்டத் தொடரின் மூன்­றா­வது நாள் அமர்வில் இலங்­கையின் சார்பில்  வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன உரை­யாற்­றினார். மனித உரிமைப் பேர­வையில் கூட்டத் தொடர்  ஒன்று ஆரம்­ப­மா­கி­ய­வுடன் முதல் மூன்று நாட்கள்   உறுப்பு நாடுகள் அல்­லது  உறுப்பு அல்­லாத நாடு­களின்   உயர்­மட்ட பிர­தி­நி­திகள் பேர­வையில் உரை­யாற்­று­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­படும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே   மூன்­றா­வது நாளான புதன்­கி­ழமை   வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்தன இலங்­கையின் சார்பில் உரை­யாற்­றி­ய­துடன்  அனு­ச­ர­ணையை  மீளப்­பெ­று­வது தொடர்­பான  அறி­விப்­பையும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக  ஜெனிவா பேர­வையில்  வெளி­யிட்டார்.
இதன்­போது  12 நிமி­டங்கள்  பேர­வையில் உரை­யாற்­றிய  வெளி­வி­வ­கார அமைச்சர்  தினேஷ் குண­வர்த்­தன பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக விளக்­க­ம­ளித்தார்.    அவ­ரு­டைய உரை­யி­லி­ருந்து   சில முக்­கிய விட­யங்­களை  இங்கு தரு­கிறோம்.

‘‘ஜெனிவா பேர­வையில் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணைக்கு முன்­னைய அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கி­யமை  இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லாகும். எனவே எமது அர­சாங்கம் 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய பிரே­ர­ணை­க­ளுக்­கான அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­கின்றது. எனினும் மனித உரிமை மீறல்கள் மற்றும்  சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்து ஆராய்ந்த முன்­னைய ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கையை ஆராய உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் ஒரு­வரின்  தலை­மையில்   விசா­ரணை ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­படும். 30/1 பிரே­ர­ணைக்கு  அனு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம் இலங்கை முன்­னைய  அர­சாங்கம் உள்­ளக  ஒழுங்கு விதி­களை மீறி­யி­ருக்­கி­றது.  அமைச்­ச­ர­வையின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்­றத்­திற்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை.  ஜனா­தி­ப­தியின்  ஆலோ­ச­னையும் பெறப்­ப­ட­வில்லை. இலங்­கையின்  இறை­மை­யையும்  மதிப்­பையும் அவ­ம­திப்­ப­தாக  அமைந்­தி­ருக்­கி­றது. 30/1 பிரே­ர­ணை­யா­னது இலங்­கையின் தேசிய  அக்­க­றையை குறைத்து மதிப்­பி­டு­வ­தாக அமைந்­தது. தேசிய உள­வுத்­து­றையின் செயற்­பா­டுகள்   பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டன. அதன் கார­ண­மாக உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை தடுக்க முடி­யாமல் போனது. இலங்­கை­யா­னது  ஐக்­கி­ய­நா­டுகள் சபை கட்­ட­மைப்­புடன் தொடர்ந்து இணைந்து செயற்­படும். மேலும்  அனைத்து உறுப்பு நாடு­க­ளு­டனும் இணைந்து இந்த பிரே­ர­ணையை  முடி­வுக்கு கொண்­டு­வர அர­சாங்கம் செயற்­படும். இலங்கை அர­சாங்­கத்தை விட எமது மக்கள் மீது யாரும் அக்­க­றை­யுடன் செயற்­பட முடி­யாது.   எனவே  அனைத்து தரப்­பி­னரும்  எம்­முடன் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என நாம்  அழைப்பு விடுக்­கின்றோம்.’’

இவ்­வாறு  பல்­வேறு விட­யங்­களை  வெளி­வி­வ­கார அமைச்சர்  பேர­வையில்  எடுத்­து­ரைத்­தி­ருந்தார். அதன்­படி   இலங்­கை­யா­னது   30/1  பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து   உத்­தி­யோ­க­பூர்­வ­மாக   வில­கி­யி­ருக்­கி­றது.  அடுத்­த­தாக   அவ்­வாறு விலகும் அர­சாங்கம்  பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்கு நீதியைப்  பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு   என்ன மாற்று நட­வ­டிக்­கையை பெற்­றுக்­கொ­டுக்கும்  என்­பதும்   இங்கு மிக முக்­கி­ய­மான விட­ய­மாகும். இது தொடர்­பி­லேயே   புலம் பெயர் மக்­களும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­களும்   ஆராய்ந்து வரு­கின்­றனர்.   இலங்கை அர­சாங்கம் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளதால்  இனி எந்­த­வ­கை­யிலும் தமக்கு  நீதி  கிடைக்­காது என்று  பாதிக்­கப்­பட்ட மக்கள் கரு­து­கின்­றனர்.  ஜெனி­வா­விற்கு வருகை தந்­தி­ருக்­கின்ற   இலங்­கையின் காணா­மல்­போ­னோரின்   உற­வு­களின் சங்­கத்தின் பிர­தி­நி­திகள் எம்­மிடம் கருத்து பகிர்­கையில் அர­சாங்கம்  பொறுப்­புக்­கூ­றலில் இருந்து வில­கி­யுள்­ளதால் சர்­வ­தேசம்  எமக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் எனத் தெரி­வித்­தி­ருந்­தனர்.  



வடக்கு–கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் உற­வு­களின் சங்­கத்தின் தலைவி யோக­ராஜா கன­க­ரஞ்­சனி மற்றும் செய­லாளர் லீலா­தேவி ஆனந்­த­ராஜா சங்­கத்தின் மட்டு. மாவட்ட தலை­வியும் வடக்கு–கிழக்கு உப தலை­வி­யு­மான அம­லராஜ் அம­ல­நா­யகி ஆகியோர் இம்­முறை ஜெனிவா வந்­துள்­ள­துடன் இலங்கை குறித்த உப­குழுக் கூட்­டங்­களில் பங்­கேற்று உரை­யாற்றி வரு­கின்­றனர்.
ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமும் சர்­வ­தே­சத்­தி­டமும் நீதியைப் பெறவே நாங்கள் இங்கு வந்­துள்ளோம். சர்­வ­தேசம் இனி­யா­வது எமக்கு நீதியைப் பெற்­றுத்­த­ர­வேண்டும்.

இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக இலங்கை அறி­வித்­து­விட்­டது. எனவே இனி­யா­வது சர்­வ­தேசம் எமக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும்.  
காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை நாங்கள் நம்­ப­வில்லை. கடந்த அர­சாங்­கமும் எம்மை ஏமாற்­றி­யது. தற்­போ­தைய அர­சாங்கம் நேர­டி­யா­கவே கூறி­விட்­டது. காணாமல் போனோர் இறந்­து­விட்­டனர் என்று கூற முடி­யாது. நாங்கள் எங்கள் பிள்­ளை­களை ஒப்­ப­டைத்தோம். அவர்­களை மீட்­டுத்­த­ர­வேண்டும். இதனை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை புரி­ய­வேண்டும்  என்று காணா­மல்­போ­னோரின் உற­வுகள்  தெரி­வித்­தனர்.

இவ்­வாறு தற்­போது பாதிக்­கப்­பட்ட மக்கள் சர்­வ­தே­சத்தை நாடிச்­செல்லும் நிலை உரு­வா­கி­யி­ருப்­ப­தாக இங்கு  ஜெனிவா வளா­கத்தில் பல்­வேறு  தரப்­பினரும் தெரி­வித்து வரு­கின்­றனர். அர­சாங்­கத்தை பொறுத்­த­வ­ரையில்  இந்த  30/1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து  வில­கு­வ­தாக  ஆரம்­பத்­தி­லி­ருந்தே கூறி­வந்­தது. தற்­போ­தைய  அர­சாங்கம்  எதிர்க்­கட்­சியில் இருந்­த­போதே  பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­யமை தவறு என்றும் தாம் ஆட்­சிக்கு வந்­ததும்    அதி­லி­ருந்து வில­கி­வி­டு­வ­தா­கவும்  தெரி­வித்து வந்­தது. அத­ன­டிப்­ப­டை­யிலேயே  ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான  அர­சாங்கம் இந்த பிரே­ரணை தொடர்பில்   ஆராய்ந்­த­துடன்  அதி­லி­ருந்து  விலகும் தீர்­மா­னத்தை  எடுத்­தது. அதன்­படி  தற்­போது  இந்த தீர்­மானம்  ஐ.நா.  மனித   உரிமைப் பேர­வைக்கு   வெளி­வி­வ­கார அமைச்­ச­ரினால்   உத்­தி­யோ­க­பூர்­வ­மாக  அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமை எவ்­வாறு அமையும்   என்­பது தொடர்­பாக  அடுத்த கட்­ட­மாக   புலம்­பெயர் மக்­களும்  பாதிக்­கப்­பட்ட   மக்­களின்   பிர­தி­நி­தி­களும்    ஆராய்ந்து   வரு­கின்­றனர்.   சர்­வ­தேச சமூ­கமும் அர­சாங்­கத்தின் இந்த தீர்­மானம் தொடர்பில்   கடும் அதி­ருப்தி அடைந்­தி­ருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. ஜெனிவா வளா­கத்தில் வெளி­வி­வ­கார   அமைச்சர்  தினேஷ்  குண­வர்த்தனவைச்   சந்­தித்த   பிரிட்­டனின் வெளி­வி­வ­கார  அலு­வ­லக  இரா­ஜாங்க  அமைச்சர்  தாரீக்   இலங்கை  பிரே­ரணையிலி­ருந்து  வில­கி­யமை தொடர்பில் கடும் அதி­ருப்தியை   வெளி­யிட்­டி­ருந்தார். அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச அமைப்­புக்­களும்   இது தொடர்பில்     கவலை  வெளி­யிட்­டி­ருந்­தன.

இந்த இடத்தில் அர­சாங்கம் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  வில­கி­யுள்ள நிலையில்   அடுத்து என்ன நடக்கும் என்­பது தொடர்­பா­கவும்   தமிழ் மக்கள்   எவ்­வா­றான   நட­வ­டிக்­கையில்  ஈடு­பட வேண்டும் என்­பது குறித்தும்   ஜெனிவா வளா­கத்தில் பரந்­து­பட்ட ரீதியில்   பேசப்­பட்டு வரு­கின்­றது. ஜெனிவா மனித உரிமைப் பேர­வையைப் பொறுத்­த­வ­ரையில்  சம்­பந்­தப்­பட்ட நாடு இணக்கம் தெரி­விக்­கா­விடின் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுக்­கு­மாறு நிர்ப்­பந்­திக்க முடி­யாது.  கோரிக்கை விடுக்­கலாம், வலி­யு­றுத்­தலாம், மாறாக ஒரு­நாட்டின் மீது  தடை­களை  அமுல்­ப­டுத்த முடி­யாது.  எனவே  மனித உரிமைப் பேர­வையின் வரை­யறை தொடர்பில் புரிந்­து­கொண்டு புலம்­பெயர் அமைப்­புக்­களும்  பாதிக்­கப்­பட்ட மக்­களின்  பிர­தி­நி­தி­களும்  செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. அது­மட்­டு­மன்றி   பல யதார்த்­தத்தை  புரிந்­து­கொண்டு   செயற்­ப­டு­வதும்  அவ­சி­ய­மா­கின்­றது.

யுத்தம் 2009ஆம் ஆண்டு முடி­வ­டைந்­தது. அதன்­பின்னர் 2015ஆம் ஆண்டு வரை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் மூன்று  பிரே­ர­ணைகள் சர்­வ­தேச நாடு­க­ளினால்  கொண்­டு­வ­ரப்­பட்­டன.   ஆனால்   2015 ஆம் ஆண்டு வரையில்  எந்­த­வி­த­மான  ஒரு முன்­னேற்­றமும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில்   இடம்­பெ­ற­வில்லை.   இந்த சூழ­லி­லேயே  2015ஆம் ஆண்டு அப்­போ­தைய  நல்­லாட்சி அர­சாங்­கத்தின்   அனு­ச­ர­ணை­யுடன்  30/1 பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. கடந்த ஆட்­சியில்    இந்த பிரே­ரணை அமு­லாக்கல் விடயம் பாரிய முன்­னேற்­றத்தை   தர­வில்லை. எனினும்  காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டது. இழப்­பீடு வழங்கும்  அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டது. புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் ஒரு கட்­டத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள்  ஸ்தம்­பி­த­ம­டைந்­தன. அதே­போன்று    காணா­மல்­போனோர்  குறித்த அலு­வ­லகம் தொடர்­பா­கவும்  பாதிக்­கப்­பட்ட  மக்கள் மத்­தியில்  மிகப்­பெ­ரி­ய­தொரு   நம்­பிக்கை இல்லை. அந்­த­வ­கையில்  இங்கு  ஒரு யதார்த்­தத்தைப் புரிந்­து­கொள்­ள­வேண்டி  இருக்­கி­றது. கடந்த 11 வரு­டங்­க­ளாக    ஆறுக்கும் மேற்­பட்ட   பிரே­ர­ணைகள்  ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில்   நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றில்  மூன்று பிரே­ர­ணை­களை இலங்கை  நிரா­க­ரித்­தது. அதன்­பின்னர் ஒரு­சில பிரே­ர­ணை­க­ளுக்கு அனு­ச­ரணை வழங்­கி­யது.  தற்­போது அந்த அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து   வெளியே வந்­தி­ருக்­கின்­றது. 

அவ்­வாறு பார்க்கும் போது  எத்­தனை பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்டும்  பாதிக்­கப்­பட்ட மக்கள் விட­யத்தில் எந்த விமோ­ச­னமும் கிடைக்­க­வில்லை என்­பதே  யதார்த்­த­மாகும். அதனால் புலம்­பெயர் மக்­களும்  பாதிக்­கப்­பட்ட   மக்களும் இந்த விட­யங்­களை உணர்ந்து மிகவும்   செயற்­றி­ற­னாக   செயற்­பட   முன்­வ­ர­வேண்டும்.   பாதிக்­கப்­பட்ட மக்கள்   நீதிக்­காக காத்­தி­ருக்­கின்­றனர்.   காணா­மல்­போன  தமது உற­வு­க­ளுக்கு  என்ன நடந்­தது என்ற  உண்­மையை     அறிந்­து­கொள்ள   அவர்­க­ளுக்கு  உரிமை இருக்­கின்­றது.   ஆனால்   அவ்­வாறு  உண்­மையை  கண்­டு­பி­டிப்­ப­தி­லேயே   இழு­பறி நிலவி வரு­கின்­றது.   இதனால் பாதிக்­கப்­பட்ட மக்கள்   விரக்தி   அடைந்­தி­ருக்­கி­ன­்றனர்.   எதிர்­பார்ப்­புக்கள்   இன்றி வாழ்க்­கையை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.   வயது முதிர்ந்த  தாய்  தனது பிள்­ளைக்கு   என்ன நடந்­தது என்­பதை  அறி­யாமல்   வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறார்.   எப்­போ­தா­வது  தமக்கு நீதி கிடைக்கும்  அல்­லது உண்மை வெளிப்­ப­டுத்­தப்­படும் என்ற நம்­பிக்கை இந்த மக்­க­ளுக்கு இருந்­தாலும்  காலம்  கடந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­மை­யினால்   தற்­போது நம்­பிக்கை இழக்­கப்­பட்டு   விரக்தி நிலைக்கு வந்­தி­ருக்­கின்­றனர். இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே     அர­சாங்கம்    பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை  வலி­யு­றுத்­து­கின்ற  30/1 பிரே­ர­ணையின்   அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து    வில­கி­யி­ருக்­கி­றது.   இந்த  அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து விலகும் தீர்­மா­னத்தை  பேர­வையில் அறி­வித்த வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தாம் பிரே­ர­ணை­யி­லி­ருந்து  வில­கி­னாலும்  பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் பொறுப்­புடன்  செயற்­ப­டு­வ­தாக  அறி­வித்­தி­ருக்­கின்றார்.  அத­ன­டிப்­ப­டை­யி­லேயே  அரசாங்கம்   உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர்  தலைமையில்    விசாரணை ஆணைக்குழு  ஒன்றை  நியமிக்கவுள்ளதாக அமைச்சர்  தினேஷ்  குணவர்த்தன  தெரிவித்திருக்கின்றார்.  இதனூடாக கடந்த காலங்களில் செயற்பட்ட  ஆணைக்குழுக்கள்  வெளியிட்ட அறிக்கைகள்   ஆராயப்படும் என்றும் அவர்  குறிப்பிட்டிருக்கின்றார்.  

உண்மையில் சர்வதேச சமூகம்  இந்த  விடயத்தில் அடுத்ததாக  என்ன செய்யப் போகின்றது என்பதையே  அனைத்து தரப்பினரும்  பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.   ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் சர்வதேச சமூகமும் இணைந்தே இலங்கை தொடர்பான பிரேரணைகளை   ஜெனிவாவில் கொண்டுவந்திருந்தன. தற்போது   அந்தப் பிரேரணைகளினால் இதுவரை   எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.  எனவே அடுத்த கட்டமாக சர்வதேச சமூகம்  எவ்வாறான   நகர்வுகளை முன்னெடுக்கும் என்பது பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்திருக்கின்றது. அனுசரணையிலிருந்து விலகி  இருக்கின்ற அரசாங்கம் அடுத்ததாக மாற்றுத்திட்டமொன்றை முன்வைக்கவேண்டும்.  எதிர்வரும்  செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள  ஐ.நா. மனித உரிமை பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் அரசாங்கம் இந்த  மாற்றுத்திட்டத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் எவ்வாறு விடயங்கள்   இடம்பெறப்போகின்றன என்பதையே சர்வதேச சமூகமும் பாதிக்கப்பட்ட மக்களும் புலம்பெயர் அமைப்பினரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22