Ma’s குக்கிங் ஸ்டுடியோ மூலம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஜப்பானிய உணவு செய்முறை விளக்கமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட உணவுப்பிரியர்கள் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

இலங்கையின் புகழ்பெற்ற மசாலப்பொருட்கள் வர்த்தகநாமமான Ma’s ட்ரொபிகல் புரொசஸிங்(பிரைவற்) லிமிடெட் நிறுவனமானது சுவைமிகு ஜப்பானிய உணவு வகைகளை வீட்டிலேயே எவ்வாறு இலகுவாக சமைத்துக்கொள்வது என்பதை வாடிக்கையாளர்கள் மத்தியில் விளக்கமளிக்கும் அற்புதமான களத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

“எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் தனித்துவமிக்க ஜப்பானிய உணவு வகைகளின் அனுபவத்தை வழங்கியதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

எமது செய்முறை விளக்கங்களில் பங்குபற்றியோர் சுவைமிகு, ஆரோக்கியம் நிறைந்த ஜப்பானிய உணவு வகைகளை தற்போது வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள முடியும்” என Ma’s ஃபூட்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் முகாமையாளரும் ‘Muluthange’ காலாண்டு உணவு இதழின் ஆசிரியருமான சாரா டி சில்வா தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது Ma’s Gourmet Shop இல் உள்ள Ma’s குக்கிங் ஸ்டுடியோவில் உள்ள சமையலறையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்குபற்றியவர்கள் தங்களைப் போன்ற உணவு பிரியர்களைச் சந்திக்கவும், ஆசிய உணவுகள் குறித்த டிப்ஸ்களை அறிந்துகொள்ளவும்ரூபவ் தத்தமது வீடுகளிலேயே இலகுவாக ஜப்பான் உணவு வகைகளை தயாரித்துக்கொள்வது குறித்தும் அறிந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர்களான அகிகோ டாமே மற்றும் தினுக பெரேரா ஆகியோர் Kaarage, Tonkatsu, Curry Noodle, Curry Rice மற்றும் Ebi Fry போன்ற சில முக்கிய ஜப்பான் உணவு வகைகளை சரியான விதத்தில் தயாரித்துக் கொள்வது எவ்வாறு என விளக்கமளிக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் உணவு பதப்படுத்தல் துறை முன்னோடியாக MA’s  ஃபூட்ஸ் நிறுவனம் திகழ்கிறது. கடுமையான தர கட்டுப்பாடுகளை பின்பற்றிவரும் MA’s நிறுவனம் முன்னணி பதப்படுத்திய உணவுகள்ரூபவ் சீசனிங் மற்றும் மசாலாப்பொருள் உற்பத்திகளை இலங்கை சந்தையில் வழங்கி வருகிறது.