ஜனாதிபதி கோத்தாவை சந்தித்து நன்றிதெரிவித்து விடைபெற்றார் சீனத் தூதுவர்

Published By: Daya

28 Feb, 2020 | 03:30 PM
image

இலங்கைக்கான சீன தூதுவரின் பதவிக்காலம் முடிவடைந்தமையால் செங்க்சியு ஆன்  இலங்கையில் இருந்து சீனாவிற்கு செல்வதற்கு முன் நேற்று ஜனாதிபதியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். 

இலங்கையில் சீனாவின் தூதுவராக கடமையாற்றக் கிடைத்தமை, தனக்கு கிடைத்த கௌரவமாகும் என சீன தூதுவர் குறிப்பிட்டார்.

 தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையில் இருந்து விடைபெற்றுச்செல்லும் முன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இலங்கையில் தனது பதவிக்காலத்தில் மறக்க முடியாத பல நினைவுகள் காணப் படுவதாக குறிப்பிட்ட தூதுவர், தனது புதிய பதவியிலும் இலங்கைக்கு தன்னாலான அனைத்து வித உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டார்.

 கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு வழங்கிய ஆதரவுக்காக இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் செங்க்சியுஆன் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு அன்பளிப்புச் செய்த கறுப்புத் தேயிலைத் தொகுதிக்கும், நாடு பூராகவும் நடைபெற்ற ஆசிர்வாதப் பூஜைகளுக்காகவும் தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

வைரஸ் தொற்று உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப் பிட்டார்.

தூதுவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி எதிர்வரும் காலங்களிலும் இலங்கைக்கு உதவிகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். கொழும்பு – இரத்தினபுரி அதிவேகப்பாதை, சூரிய மற்றும் காற்று விசையினால் தொழிற்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட சக்தி வலுத்திட்டம் மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் தொடர்பாக ஜனாதிபதி தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

கொழும்பு துறைமுக நகரின் முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளை செய்து கொடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48