பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு என்ன பதில்?

Published By: Daya

28 Feb, 2020 | 12:43 PM
image

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில்  கடந்த 2015ஆம் ஆண்டு  அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஐந்து நாடு­க­ளினால்  இலங்கை தொடர்­பாக  கொண்­டு­வ­ரப்­பட்டு அப்­போ­தைய இலங்கை அர­சாங்­கத்தின்   இணை அனு­ச­ர­ணை­யுடன்  வாக்­கெ­டுப்­பின்றி ஏக­ம­ன­தாக  நிறை­வேற்­றப்­பட்ட  30/1  என்ற  இலங்­கையின்  நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் ஊக்­கு­விப்­ப­தற்­கான பிரே­ர­ணையின்  அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து   இலங்­கையின்  தற்­போ­தைய  அர­சாங்கம்   உத்­தி­யோக­பூர்­வ­மாக  வில­கி­யி­ருக்­கி­றது.

ஜெனிவா மனித  உரிமைகள் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் கடந்த திங்­கட்­கி­ழமை முதல்  நடை­பெற்று வரு­கின்ற நிலையில்   நேற்று முன்­தினம்  புதன்­கி­ழமை   வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­த்தன இலங்­கையின் சார்பில் பேர­வையில்  உரை­யாற்­றி­ய­போதே இலங்­கை­யா­னது   பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வில­கு­வ­தா­கவும் அறி­வித்­த­துடன் அதற்­கான கார­ணங்­க­ளையும்    எடுத்­து­ரைத்தார்.

பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக விரி­வான விளக்­க­மொன்றை அளித்த  வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன 30/1  பிரே­ர­ணை­யா­னது  இலங்­கையின்  அர­சி­ய­ல­மைப்­பினை மீறு­வ­தா­கவும் இலங்கை மக்­க­ளி­னதும் பாரா­ளு­மன்­றத்­தி­னதும் அனு­ம­தியை பெற­வில்லை என்றும் அதனால் இந்த பிரே­ர­ணை­யி­லி­ருந்து   ஜனா­தி­பதி கோத்­த­பாய தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வில­கு­வ­தா­கவும்   சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இலங்கை அர­சாங்கம்  30/1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கப்­போ­வ­தாக  ஏற்­க­னவே  தெரி­விக்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே கடந்த புதன்­கிழமை  இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கி­யி­ருக்­கி­றது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்­ததும் இலங்­கைக்கு  முன்னாள் ஐ.நா. பொது செய­லாளர்  பான் கீ மூன் விஜயம் செய்­தி­ருந்தார். அப்­போது அவ­ருக்கும் முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டையில் ஒரு கூட்­ட­றிக்கை  உரு­வாக்­கப்­பட்­டது. அதில் இலங்­கை­யா­னது  யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும்  விட­யங்கள் தொடர்பில் உள்­ள­க ­ரீ­தியில் ஆராயும் என்று வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. அதன்­பின்னர் இலங்கை தானாக ஜெனிவா   மனித உரிமைகள் பேர­வையில்  2009ஆம் ஆண்டு ஜூன் மாத­ம­ளவில் ஒரு பிரே­ர­ணையை கொண்­டு­வந்­தது.

அதிலும் உள்­ளக செயற்­பாடு தொடர்பில் பல்­வேறு விட­யங்கள்  இடம்­பெற்­றி­ருந்­தன.   தொடர்ந்து  கற்­றறிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு  நிய­மிக்­கப்­பட்டு   அது தொடர்­பான அறிக்கை பெறப்­பட்­ட­போ­திலும் அந்த அறிக்கை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.  இதனால்  சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையும் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல்,  நல்­லி­ணக்கம் தொடர்­பாக அதி­ருப்தி அடைந்­த­துடன்   2012, 2013, 2014 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்­பாக மூன்று பிரே­ர­ணைகள் கொண்­டு­வந்­தன. எனினும் அப்­போ­தைய அர­சாங்கம் அந்தப் பிரே­ர­ணை­களை முழு­மை­யாக நிரா­க­ரித்­தி­ருந்­தன. தாம் எந்­த­வ­கை­யிலும்     அந்தப் பிரே­ர­ணை­க­ளுக்கு  கட­மைப்­ப­ட­வில்லை என்றும்  அவற்­றுக்குப் பொறுப்­புக்­கூற முடி­யாது என்றும் முன்­னைய அர­சாங்கம்   அறி­வித்­தி­ருந்­தது.

இந்த நிலை­யி­லேயே   2015ஆம் ஆண்டு நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தை அடுத்து முன்­னைய   நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் 30/1 பிரே­ரணை ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில்  அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.  அதில்  20 பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்றில் மிக முக்­கி­ய­மாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் வெளி­நாட்டு பொது­ந­ல­வாய நீதி­ப­திகள் மற்றும் வழக்­க­றி­ஞர்கள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டு­மென   ஒரு பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.  அந்தப் பரிந்­து­ரையை   2015 ஆம் ஆண்டு எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து மஹிந்த தரப்­பினர் கடு­மை­யாக  எதிர்த்­தனர்.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறும் வகையில் 30/1 அமைந்­துள்­ள­தா­கவும் இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் இதற்கு   முன்­னைய அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கி­யமை மிகப்­பெ­ரிய தவறு என்றும்   தெரி­வித்து வந்­தனர்.

தாம் ஆட்­சிக்கு வந்­ததும்  குறித்த பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­வி­டு­வ­தா­கவும் அனு­ச­ர­ணையை மீளப்­பெ­று­வ­தா­கவும் கூறி­வந்­தனர். இந்தப் பின்­ன­ணியில் 2019 ஆம்­ ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ஜெனிவா  பிரே­ர­ணை­யா­னது பாரி­ய­தொரு பேசு­பொ­ரு­ளாக காணப்­பட்­டது. தேர்­தலில்  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ

ப­க் ஷ அதி­கா­ரத்­திற்கு வந்­த­தை­ய­டுத்து வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட தினேஷ் குண­வர்த்­தன இந்த பிரே­ரணை தொடர்­பாக ஆராய  ஒரு குழுவை நிய­மித்தார்.  அந்த குழுவின் மீளாய்வை அடுத்தே  அர­சாங்கம்  ஜெனிவா பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தது. அத­ன­டிப்­ப­டையில்  ஐக்­கிய நாடுகள் மனித   உரிமைகள் பேர­வைக்கு இது தொடர்­பான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது.

இவ்­வா­றான சூழ­லி­லேயே  புதன்கிழமை மனித   உரிமைகள் பேர­வையில் உரை­யாற்­றிய வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன  பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கு­வ­தா­கவும் எனினும் உள்­ளக ரீதியில்   தமது விட­யங்­களை ஆராய  உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஒரு­வரின் தலை­மையில் விசா­ரணை ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்டு  தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும்   குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.  

இந்த நிலையில் நீதிக்­காக காத்­தி­ருக்கும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் அடுத்­த­கட்ட நிலை எவ்­வாறு அமையும் என்­பது தொடர்­பாக  தற்­போது பேசப்­ப­டு­கின்­றது.  அர­சாங்கம்  தீர்­மா­னத்­தி­லி­ருந்து விலகும் பட்­சத்தில்   தாம் மாற்று ஏற்­பாட்­டுக்கு தயா­ராக இருப்­ப­தாக கடந்­த­வாரம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அறி­வித்­தி­ருந்­தது. அதே­போன்று அர­சாங்கம்  பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­னாலும்  பிரே­ரணை அமுலில் இருக்கும் என்றும்  அதனை  நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டிய பொறுப்பு  இலங்­கைக்கு இருக்­கின்­றது என்றும்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அறி­வித்­தி­ருந்­தது.

அது­மட்­டு­மன்றி 43 ஆவது கூட்டத் தொடர்  தொடங்­கு­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர்   ஜெனி­வா­விற்கு சென்­றி­ருந்த தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.  சுமந்­திரன்   அர­சாங்கம்  தீர்­மா­னத்­தி­லி­ருந்து வில­கினால் அடுத்­த­கட்­ட­மாக என்ன செய்­வது என்­பது தொடர்­பாக உறுப்­பு­நா­டு­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் ஆராய்ந்­தி­ருந்தார். அந்­த­வ­கையில் தற்­போது அர­சாங்கம்  பிரே­ர­ணையின்  அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து உத்­தி­யோ­கபூர்­வ­மாக வில­கி­யி­ருக்­கின்­றது.  அதனால் அடுத்த கட்­ட­மாக  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­களும் சர்­வ­தேச சமூ­கமும்   ஐக்­கி­ய ­நா­டுகள் சபையும்   எவ்­வாறு  தமது நகர்­வு­களை எடுக்­கப்­போ­கின்­றன என்­பது தொடர்பில்  பேசப்­ப­டு­கின்­றது.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் அர­சாங்­க­மா­னது  அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  வில­கி­யுள்ள நிலையில் தாம்   பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு எவ்­வா­றான அணு­கு­மு­றையில் தீர்வை வழங்­கப்­போ­கின்றோம் என்­பதை  அறி­விக்­க­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் இந்த நாட்டின் பிர­ஜைகள் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. அவர்­களின் வேதனை முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யாமல் இந்த மக்கள் தவித்­துக்­கொண்­டிருக்­கின்­றனர். பிள்­ளை­களை தொலைத்­து­விட்டு தாய்மார் படும் வேதனை சொல்­லி­லடங்­காது.  தினமும் கண்ணீர் விட்­ட­வண்­ணமே இந்த மக்கள் வாழ்க்­கையை கடத்­து­கின்­றனர். எனவே  ஒரு நம்­ப­க­ர­மான பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

அது­மட்­டு­மன்றி அர­சாங்கம் 30/1  பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து   உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வில­கி­யுள்ள நிலையில்  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க அடுத்த கட்டமாக  என்ன மாற்றுத்திட்டத்தை முன்னெடுக்கப்போகின்றது என்பது தொடர்பாக விளக்கமளிக்கவேண்டியது அவசியமாகும்.  முக்கியமாக   தற்போது  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குண­வர்த்தன ஜெனிவா பேரவையில்  உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில்  விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். ஆனால், அது எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்ற  விபரமான  விடயங்கள்  வெளிப்படுத்தப்படவேண்டும்.

கடந்த 11 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.  சர்வதேச சமூகமும்  இந்த விடயத்தில் அழுத்தம் பிரயோகித்தபோதிலும் இதுவரை எந்தவிடிவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதிலை சம்பந்தப்பட்ட தரப்பினர்   வழங்கப்போகின்றனர் என்பதே  தற்போதைய நிலைமையில்   எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. பாதிக்கப்பட்ட  மக்கள் கைவிடப்படக்கூடாது  என்பதுடன் அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.

(28.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48