ஹைதராபாத் அணியின் தலைவராக வோர்னர் நியமனம் - ரசிகர்கள் அதிருப்தி

28 Feb, 2020 | 11:41 AM
image

2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இரசிகர்கள் சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்

சன்ரைசர்ஸ்; அணியின் தலைமை பொறுப்பிலிருந்து நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டு டேவிட் வோர்னர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஹைதராபாத் அணியின் தலைவராக வில்லியம்சனே நீடித்திருக்கவேண்டும் என பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கேன் வில்லியம்சன் என்ன தவறு செய்தார் என யாராவது தெரிவிக்க முடியுமா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது கேலிக்குரிய விடயம் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

தலைமைப்பதவிக்கு கேனே வோர்னரை விட பொருத்தமானவர் என குறிப்பிட்டுள்ள மற்றுமொரு ரசிகர் சன்ரைசர்ஸ் அணி தலைமைப்பதவி தொடர்பில் பெரும் தவறிழைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நான் வோர்னரை மதிக்கின்றேன் ஆனால் அவரை அணித்தலைவராக ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத் அணியின் ரசிகர் என்ற அடிப்படையில் எனக்கு வில்லியம்சனின் பெறுமதி தெரியும் என டுவிட்டரில் பதிவு செய்துள்ள ரசிகர் ஒருவர் அவர் எப்போதும் பொறுமையிழக்காதவர் அவர் எப்போதும் சிரிப்பவர் எனவும் தெரிவித்துள்ளார்.

வோர்னர் எப்போதும் எங்களிற்கு ஒரு அவமானம் எனவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் பதவி கிடைத்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள டேவிட்வோர்னர் இந்த வருடம் தனது அணிக்கு கிண்ணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58