காணா­மல் ­போனோர் குறித்த அலு­வ­லகம் தொடர்ந்து இயங்கும்- தினேஷ்

Published By: Daya

28 Feb, 2020 | 10:06 AM
image

காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை  தொடர்ந்து கொண்டு நடத்­து­வ­தற்கு  அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.  இலங்­கையில் நிரந்­தர சமா­தா­னத்தை அடைய ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் இணைந்து பணி­யாற்­றுவோம் என்று  வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

ஜெனிவா பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பான விவா­தத்தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர்  மேலும்  குறிப்­பி­டு­கையில்,

30–1 மற்றும்  40–1 போன்ற பிரே­ர­ணை­க­ளுக்­கான அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து அர­சாங்கம் வில­கி­னாலும்   ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யுடன் தொடர்ந்து இணைந்து பணி­யாற்­றுவோம்.  அபி­வி­ருத்தி நிரந்­தர சமா­தானம் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூறல் போன்­ற­வற்றில் நாங்கள்  ஐ.நா. வுடன் இணைந்து பணி­யாற்­றுவோம்.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ அதிக  மக்­களின்  ஆணை­யுடன் ஆட்­சிக்­கு­வந்­துள்ளார். அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­னாலும் உள்­ளக ரீதியில் இந்த பிரச்­சி­னை­களை ஆராய தயா­ராக இருக்­கின்றோம்.  கால அட்­ட­வ­ணை­யுடன் செயற்­ப­டுவோம். கடந்த நான்­கரை வரு­டங்­க­ளாக 30–1 பிரே­ரணை இழுத்­த­டிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தது.  நாங்கள் ஆட்­சிக்கு வந்து  100 நாட்­களே கடந்­துள்­ளன. மனித உரிமை பேரவை எமது மக்கள் வழங்­கி­யுள்ள ஆணையை கவ­னத்தில் எடுக்­க­வேண்டும். 

இரா­ணுவ தள­பதி சவந்­திர சில்வா மீது சில நாடுகள் நட­வ­டிக்கை எடுத்­துள்ள இயற்கை நீதிக்கு புறம்­பா­ன­தாகும். நாம் தொடர்ந்து அவ­ருக்­காக முன்­நிற்போம். சித்­தி­ர­வ­தைகள் குறித்த குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரி­க­கின்றோம்.  முறைப்­பாடு செய்தால் விசா­ரணை நடத்­தப்­படும்.  

13 ஆவது திருத்­தத்­துக்கு அமைய வடக்கு மக்­க­ளுக்கு வாக்­கு­ரி­மையை 25 வரு­டங்­க­ளுக்கு பின்னர் நாங்­களே வழங்­கினோம். விரைவில்  மாகாண சபை­க­ளுக்கு தேர்தல் நடை­பெறும். காணாமல் போனோர் அலுவலகத்தை  தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இழப்பீடும் வழங்கப்படும். உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17