அர்­ஜுன மகேந்­திரன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள், இது­வரை நிரூ­பிக்­கப்­ப­ட­வி்ல்லை என்­கிறார் பாலித

Published By: Robert

17 Jun, 2016 | 09:24 AM
image

இலங்கை மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து தற்­போது கோப் குழு­வினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட வண்­ண­முள்­ளன. இதன்­பி­ர­காரம் விசா­ர­ணை­களின் பின்னர் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­படும். மேலும் அர்­ஜூன மகேந்­தி­ரனின் பத­வியை நீடிப்­பதா ? இல்­லையா ? என்­ப­தனை தீர்­மா­னிப்­பதில் கோப் குழுவின் அறிக்­கையும் ஆதிக்கம் செலுத்தும் என்று கோப் குழுவின் அங்­கத்­த­வரும் தொழிற்­ப­யிற்சி துறை இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான பாலித ரங்கே பண்­டார தெரி­வித்தார் .

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் .

இரா­ஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார மேலும் குறிப்­பி­டு­கையில்

இலங்கை மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை பதவி நீக்க வேண்டும் என சிவில் அமைப்­பினர் மற்றும் பொது எதி­ர­ணி­யினர் கோரி­வ­ரு­கின்­றனர். அத்­துடன் அர­சாங்­கத்­திற்­குள்­ளேயும் பல கருத்­துக்கள் நில­வு­கின்­றன. எவ்­வா­றா­யினும் ஜூன் 30 ஆம் திகதி அவ­ரது பத­விக்­காலம் முடி­வ­டை­கின்­றது. . இவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மை­யா­ன­வையா ? என்­ப­தனை நாம் ஆராய வேண்டும். பலர் பல­வி­த­மான கருத்­துக்­களை கூறு­வார்கள் . அர­சாங்­கத்­தி­லுள்ள சிலர் கூட பல­வி­த­மான கருத்­துக்­களை கொண்­டுள்­ளனர் . அதற்­காக குறித்த அமைச்­சர்­க­ளினால் தெரி­விக்­கப்­பட்ட கருத்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என கூறவே முடி­யாது .

தீவிர விசா­ர­ணை­களின் முடிவு இல்­லாமல் அர­சாங்­கத்தின் நிலை­பாட்டை கூற முடி­யாது.. மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ரனை பத­வியில் தக்­க­வைத்து கொள்­வ­தற்­காக பிணை­முறி மோச­டி­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூடி­ம­றைப்­ப­தாக கூறு­கின்­றனர் .அது முற்­றிலும் தவ­றாகும் . அவர் மோசடி இழைத்­த­தாக இது­வ­ரையில் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை . எனினும் இது தொடர்பில் தீவிர விசா­ரணை செய்­யாமல் கூறமுடி­யாது . இது தொடர்பில் கோப் குழு­விலும் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது . இதன்­படி கோப் குழுவில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது. குறித்த விசா­ர­ணையின் போது நிதி அமைச்சின் கீழ் இயங்கும் திறை­சே­ரி­யி­னது அறிக்­கையும் கோரப்­பட்டு ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது . இதன்­பின்னர் கோப் குழு­வி­னது அறிக்கை கணக்­காய்­வாளர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­படும் . ஆகவே இலங்கை மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ரனின் பத­விக்­கா­லத்தை நீடிப்­பதா ? இல்­லையா ? என்­பது தொடர்­பில் தீர்­மானம் எடுக்கும் போது கோப் குழு­வி­னது அறிக்­கையும் பெரு­ம­ளவில் ஆதிக்கம் செலுத்தும் .

மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனின் விசா­ர­ணையின் போது கடந்த காலங்­களில் பிணை­முறி வழங்­கப்­பட்ட முறை­மை­யையும் ஆராய வேண்­டி­யுள்­ளது . கடந்த காலங்­களில் 12.99 என்ற வட்டி வீதத்தில் அடிப்­ப­டையில் விடுக்­கப்­பட்ட முறியை தற்­போ­தைய ஆளுநர் 12.77 என்ற வீதத்தின் அடிப்­ப­டையில் வழங்­கி­யுள்ளார் .இதன்­பி­ர­காரம் மிகவும் குறைந்த வட்­டியின் அடிப்­ப­டை­யி­லேயே பிணை­முறி வழங்­கப்­பட்­டுள்­ளது . ஆகையால் கடந்த ஆட்­சியின் போது பிணை­முறி வழங்­கப்­பட்ட விதம் முற்­றிலும் முர­ணா­னது. எனினும் அதற்கு எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. . ஆகவே இதனை பரி­சீ­லனை செய்து பார்க்க வேண்டும் .

அத்­துடன் நிதி மோசடி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு ஒரு­போதும் கலைக்­கப்­ப­ட­மாட்­டாது . குறித்த பிரிவை கலைப்­ப­தற்கு பொது எதி­ர­ணி­யி­னரே பெரும் முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றனர் . அதன்­போதே அவர்­களின் ஊழல் மோச­டிகள் மூடி மறைக்­கப்­படும் . ஆகையால் நிதி மோசடி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவினை கலைப்­ப­தற்­கான தேவை பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கே உள்­ளது. அதற்கு மாறாக அர­சாங்­கத்­திற்கு எந்தவொரு நோக்கமும் கிடையாது.

ஆகவே நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவை ஒருபோதும் கலைக்காது. . அதற்கு மாறாக அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு சுயாதீன நிறுவனமாக மாற்றப்படும். எவ்வாறாயினும் குறித்த

பிரிவின் ஊடாக இதுவரை பரிசீலிக்கப்

பட்ட விசாரணைகள் மூடி மறைக்கப்பட மாட்டாது. பல வருடங்கள் ஆனாலும்

நிலைத்து நிற்கக் கூடியதாக நிதி மோசடி குற்றப்புலனாய்வுப் பிரிவு மாற்றிய மைக்கப்படும் என்றார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15