கிந்துப்பிட்டி மயானத்தில் சடலத்தை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் ; களத்தில் பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு

Published By: Digital Desk 4

27 Feb, 2020 | 05:02 PM
image

யாழ். புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு தயாரான நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதனால் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மயானத்தை சூழவுள்ள மக்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் எதிர்மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

அந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளபப்ட்டது. இதன்போது இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மனு மீதான இறுதிக் கட்டளை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கிய கட்டளையை ரத்துச் செய்து கட்டளையிட்ட  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி கோரும் தரப்பு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து தமது விண்ணப்பத்தை மன்றில் கடந்த நவம்பர் மாதம் முன்வைத்தனர்.

“மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எரியூட்ட முடியும். அதனை எதிர்த்தரப்புத் தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்த தரப்புக்கு எதிராக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04