153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்!

Published By: R. Kalaichelvan

27 Feb, 2020 | 04:54 PM
image

153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் போது சித்தியடைந்தவர்கள் புதிய அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கல்விச்சேவை ஆணைக்குழுவினால் இவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் 278 தேசிய பாடசாலைகளுக்கு உரிய தரத்திலான அதிபர்கள் இதுவரை காலம் நியமிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 373 தேசிய பாடசாலைகளில் 278 பாடசாலைகளுக்கு இதுவரை அதிபர் நியமிக்கப்படவில்லை.

இதன்படி குறித்த வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் நேற்றைய முன்தினம் 153 பேருக்கு அதிபர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என். சித்திரானந்த உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை இணைத்துக்கொள்வதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முக பரீட்சைகளுக்கு அமைவாக  அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை குழு வழங்கிய அங்கீகாரத்திற்கு ஏற்ப 153 அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15