வாக்குறுதிகளை நிறைவேற்றாது அடக்கு முறையிலான ஆட்சியை அரசாங்கம் தொடர்கின்றது : காவிந்த

Published By: R. Kalaichelvan

27 Feb, 2020 | 03:48 PM
image

(செ.தேன்மொழி)

அரசாங்கம் அதன் ஆட்சிகாலம் முடியும் வரை மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது என்பது அதன் தற்போதைய செயற்பாடுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன , தற்போதைய அரசாங்கம் தமது அடக்குமுறை ஆட்சியை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இதேவேளை ஆர்பாட்டகாரர்கள் மற்றும் சூரியவௌ விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டை பார்வையிடசென்றவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டமையை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தமது ஆட்சிகாலம் முடியும் வரை மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் விளங்கப்போகின்றது என்பது உறுதியாகியுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது தமது வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றதை அடுத்து மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட அரசாங்க தரப்பினர் தற்போது பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் போக்கை பார்க்கையில் பாராளுமன்ற தேர்தலை அடுத்து மாகாணசபை தேர்தல் என்றும் பின்னர் பிரேதசசபை தேர்தல் என்றும் கூறிக்கொண்டு தமது வாக்குறிதிகள் எதையும் நிறைவேற்றாது காலங்கடத்துவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கமென்றால் தாம் ஆட்சிக்கு வந்து 102 நாட்கள் கடந்துள்ள நிலையில் ஒரு வாக்குறுதியையேனும் நிறைவேற்றிருக்கும் அல்லவா.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலக்கட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட அதே ஆட்சி முறைதான் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் ஆர்பாட்டத்தின் போது ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டோரை பொலிஸார் தாக்கியிருந்தனர்.

சாதாரணமாக பெண் குற்றவாளியொருவரை ஆண் பொலிஸாரால் கைது செய்யக்கூட அனுமதி இல்லாத நிலையில் , ஆண் பொலிஸார்கள் பெண்களை தாக்கியிருந்தனர். இதேவேளை சூரியவௌ விளையாட்டறங்கில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டிகளை பார்வையிடுவதற்காக சென்ற எம்நாட்டு ரசிகர்கள் பலர் நேற்று  தாக்கப்பட்டிருந்தனர். தேசிய அபிமானத்துடன் தமது கைகளில் தேசிய கொடிகளை ஏந்திய வண்ணம் சென்றவர்களை விரட்டி தாக்கியமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட அவப் பெயரை யாராவது பொறுப் பேற்றக வேண்டும். இவ்வாறு யார் மீதும் தாக்குதல்களை மேற்கொள்ள யாருக்கும் உரிமையில்லை. அதேவேளை இராணுவ ஆட்சி முறை நாட்டுக்கு தேவையில்லை. தற்போது இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் சமூகத்திற்கு தவறான எண்ணங்களை போதிக்க கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57