மின்சாரப்பட்டியலால் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் !

Published By: Daya

27 Feb, 2020 | 03:37 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்பாவனையாளர்கள் தமது பாவனைக்கு அதிகளவான மின் அலகுகளுக்குப் பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கை காரணமாக வறுமையிலுள்ள குடும்பங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாகப் பொதுமக்கள் தெரிவிக்கையில்,

 

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மின்பாவனையாளர்கள் தமது பாவனைக்கு அதிகளவான மின் அலகுகளை மின்சார சபை ஊழியர்களினால் வழங்கப்படும் மின்சாரப்பட்டியலுக்கு மேலதிக பணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மின்மானிக்கும் மின்சாரப்பட்டியலுக்கும் இடையே பல்வேறு அலகுகள் வித்தியாசம் காணப்படுகின்றன. இம்மாதம் மின்பாவனையாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மின்மானியில் காணப்படும் மின்பாவனை அலகிற்கும் மின்சாரப்பட்டியலில் காணப்படும் அலகிற்கும் பல்வேறு வித்தியாசமான நிலை காணப்படுகின்றதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அலகு ஒன்று தொடக்கம் 36வரையான அலகிற்கு 2.50சதமும் 37 தொடக்கம் 50வரையான அலகிற்கு 4.85சதமும் அறவிடப்பட்டு வருவதாக மின்சாரப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஒருவருடைய மின்சார பாவனை மானியில் 06083 என்ற நிலை காணப்படுகின்றது. அன்றைய தினம் பாவனையாளருக்கு வழங்கப்பட்ட மின்சாரப்பட்டியலில் 06106 என்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மின் பாவனை மானியிலிருந்து மேலதிகமாக 23 அலகுகளுக்கு மின்சாரப் பாவனையாளர் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மின்சார சபை ஊழியர்களின் நடவடிக்கையினால் தமது மின்சாரப்பட்டியலுக்கு அதிகப் பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் கூலிவேலைகள், வறுமையிலுள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விடயம் குறித்து தகவல் பெற்றுக்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட மின்சார பொறியியலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் எங்களிடம் முறையிட முடியும்.  மின்பட்டியலில் தொலைப்பேசி இலக்கம் காணப்படுகின்றது. அதனுடன் எங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் ஊடகங்களின் கேள்விகளுக்கு அலுவலக ரீதியாகப் பதிலளிக்க முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07