நாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம்  - ஜி. எல். பீறிஸ் 

Published By: R. Kalaichelvan

27 Feb, 2020 | 01:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கும், இறையான்மைக்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின.

மக்களாணைக்கு மதிப்பளிக்கும் விதமாகவே பிரேரணையில் இருந்து விலக தீர்மானித்துள்ளோம். இது பாரிய வெற்றியாகும்.         சர்வதேசத்தினுடனான நல்லுறவை அரசாங்கம் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லும். என பொதுஜன பெரமுனவின் தவிசாளர்  ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இணை நாடுகளுடன் 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்        கொண்டு வந்த பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தமை தேசதுரோக செயற்பாடாகவே கருத முடியும்.  

பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இலங்கை  அரசியலமைப்பிற்கும், இறையாண்மைக்கும் முற்றிலும்  முரணானதாகும். பல விடயங்கள்  சாதாரணமாகவே புறக்கணிக்கும்  அளவிற்கு முரண்பாடான தன்மைகளை மாத்திரமே  கொண்டிருந்தன.

ஒரு சில பரிந்துரைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும்  விதத்தில் காணப்பட்டன. இவை கடந்த காலங்களில் பலதரப்பட்ட விதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தின.

இலங்கையின் உள்ளக விவகாரங்களின் சுயாதீனத்தன்மைக்கு சவால்  விடுக்கும் வகையிலான பரிந்துரைகளாக பொலிஸ் மற்றும் இராணுவ சேவை மீள் திருத்தம்.

காணி விடுவிப்பு, அதிகார பகிர்வு,பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை திருத்தம், குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை  நீக்கல். உள்ளிட்ட  20 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டன.

நாட்டின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான அனுமதியை நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கியது. மனித உரிமை பேரவை நடுநிலையாக செயற்படும் அமைப்பாக காணப்பபடவில்லை.  2017ம் ஆண்டு  அமெரிக்கா மனித உரிமை பேரவையினை கடுமையாக விமர்சித்து பேரவையில் இருந்து விலகியமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சுயாதீனத்தன்மை தொடர்பான தன்மையினை வெளிப்படுத்தியது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38