அங்கஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 

Published By: Digital Desk 4

27 Feb, 2020 | 12:25 PM
image

தீவகப் பகுதியில் உள்ள 3 பிரதேச செயலகங்களை இணைத்து மூன்று பிரதேசங்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சென்ற மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதனுக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதனால் வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.வேலணை பிரதேச செயலகத்தில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தி வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற அங்கஜன் ராமநாதனை பிரதேச செயலகத்தின் வாயிலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் வழி மறித்தனர்.இதனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.எனினும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22