பொது தேர்தல் - தபால் மூல வாக்களிப்பு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை!

Published By: R. Kalaichelvan

27 Feb, 2020 | 09:55 AM
image

இந்த வருடத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்க்பபடும் பொது தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலின் போது 2019 தேருநர் இடாப்பு பயன்படுத்தப்படுவதனால் அந்த பாராளுமன்ற தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் வாக்காளர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் அரச சேவை அலுவலகர் ஒருவருக்கு அல்லது ஊழியர் ஒருவருக்கு.

இலங்கை தரைப்படையின் / இலங்கை கடற்படையின் / இலங்கை வான் படையின் உறுப்பினர் ஒருவருக்கு

பொலிஸ் திணைக்களத்தின் அல்லது சிறைச்சாலை திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கு

இலங்கை அரசாங்கத்தின் புகையிரத திணைக்களத்தின் / அஞ்சல் திணைக்களத்தின் மற்றும் தொலைத் தொடர்புகள் திணைக்களத்தின் / இலங்கை மத்திய போக்குவரத்து சபையின் / பிராந்திய போக்குவரத்து சேவை அலுவலகர் ஒருவருக்கு அல்லது ஊழியர் ஒருவருக்கு

தேர்தலுடன் தொடர்புபட்ட கடமைகளைப் புரிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள / நியமிக்கப்படுவதற்கு சாத்தியமுள்ள அரச சேவை அலுவலகர் ஒருவர் அல்லது ஊழியர் ஒருவருக்கு

தேர்தலுடன் தொடர்புபட்ட கடமைகளைப் புரிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள / நியமிக்கப்படுவதற்கு சாத்தியமுள்ள இலங்கை மத்திய வங்கியின் அலுவலகர் ஒருவர் அல்லது ஊழியர் ஒருவருக்கு

தமக்கு குறித்து ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு முடியாத / முடியாது போக சாத்தியம் இருப்பதனால் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான கோரிக்கையை விடுக்க முடியும்.

தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டதன் பின்னர் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு தமது அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தை தேவையற்ற தாமதங்கள் இன்றி நிறைவேற்றிக் கொள்வதற்காக 2019 ஆம் ஆண்டில் தேருநர் இடாப்பில் கீழ் குறிப்பிடப்படும் தகவல்களை நேர காலத்துடன் தயார் செய்து வைத்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு கோருகின்றது.

அந்த தகவல்களை உங்களது கிராம அலுவலகர் ஊடாக அல்லது நீங்கள் வசிக்கும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

தேருநர் இடாப்புடன் தெடர்புடைய ஆண்டு - 2019

நிர்வாக மாவட்டம் :

வாக்கெடுப்பு பிரிவின் அகர எழுத்தும் பெயரும்:

வாக்கெடுப்பு மாவட்டத்தின் இலக்கம்:

கிராம அலுவலகர் பிரிவு:

வீதியின் / கிராமத்தின் பெயர்:

வாக்காளரின் முழுப் பெயர்:

தனது பெயருக்கு உரிய தொடர் இலக்கம்:

தேசிய அடையாள அட்டை இலக்கம்:

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20