பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்து அமெரிக்கப் பெண் சாதனை

Published By: Daya

27 Feb, 2020 | 01:23 PM
image

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்  ஒருவர் தலைமன்னாரிலிருந்து தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி நேரத்தில் நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளார். 

சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டியில் சாதனை படைத்த அமெரிக்காவைச் சேர்ந்த 45 வயதான எடிஹ என்ற பெண்ணே தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கிலோ மீற்றர் நீளமுள்ள பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்துள்ளார்.

குறித்த பெண் பாக் ஜலசந்தியை நீந்திக் கடப்பதற்காக கடந்த மாதம் இந்தியாவின் டில்லியில் உள்ள வெளிவிவகார பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் இலங்கையின் தலை மன்னாரிலிருந்து நேற்று புதன் கிழமை காலை 05 மணிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம் மோஸ் என்பவருடன் சேர்ந்து எடிஹ  நீந்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் நண்பகல் 12.05 மணியளவில் எடிஹ மற்றும் ஆடம் ஆகியோர் இலங்கை-இந்தியச் சர்வதேச எல்லைக்கு வந்தடைந்தார்கள். பிற்பகல் 03.15 மணியளவில் தனுஸ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள முதலாம் தீடை அருகே இருவரும் வந்தனர்.

இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச கடல் எல்லை வரையிலும், இந்தியக் கடற்பகுதியில் கடலோர பாதுகாப்புப் படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32