நீதிமன்ற உத்தரவினை மீறி நேற்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களை 2 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணையில் விடுதலை செய்வதாக கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நீதவான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இருப்பின் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளார்.